தமிழகத்தில் ஆலை அமைக்கும் உ.பி., நிறுவனம்

புதுடில்லி: வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் 'பாவ்னா இண்டஸ்ட்ரீஸ்', தமிழகத்தின் ஓசூரில் ஆலை அமைக்கும் பணியை துவக்கி யுள்ளதாக தெரிவித்துள்ளது.

உ.பி.,யைச் சேர்ந்த இந்நிறுவனம், இதற்காக முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. நடப்பாண்டின் பிற்பாதியில் முதற்கட்ட தயாரிப்பு பணிகள் துவங்கும் என்றும், வாகன துறைக்கான முக்கிய உபகரணங்கள் வினியோகிப்பதில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement