ரூ.175 கோடி திரட்டியது 'அசெட்பிளஸ்'

சென்னை: சென்னையைச் சேர்ந்த டிஜிட்டல் சொத்து மேலாண்மை தளமான 'அசெட்பிளஸ்', 175 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டி உள்ளது. 'எயிட் ரோட்ஸ் வெஞ்சர்ஸ்', ஜீரோதா நிறுவனத்தின் 'ரெயின்மேட்டர்' ஆகிய நிறுவனங்கள், இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.

கடந்த 2016ல் துவங்கப்பட்ட அசெட்பிளஸ் 18,000க்கும் மேற்பட்ட மியூச்சுவல் பண்டு வினியோகஸ்தர்களுடன், கிட்டத்தட்ட 7,250 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. மாதத்துக்கு எஸ்.ஐ.பி., வாயிலாக 125 கோடி ரூபாய் முதலீடுகளையும், 1.50 லட்சம் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது அசெட் பிளஸ்.

Advertisement