ரூ.10,300 கோடியில் சென்னையில் உர ஆலை

சென்னை: சென்னையில் 10,300 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய உர ஆலையை அமைக்க 'மெட்ராஸ் பெர்ட்டிலைசர்ஸ்' நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு, மத்திய அரசின் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனமான மெட்ராஸ் பெர்ட்டிலைசர்ஸ், கடந்த 1966ல் துவங்கப்பட்டது. சென்னை மணலியில் இந்நிறுவனத்துக்கு சொந்தமான உர ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதே வளாகத்தில், ஆண்டுக்கு 13 லட்சம் டன் யூரியா உற்பத்தி திறன் கொண்ட புதிய ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு, அதன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஆலை அமைப்பதற்கான அனுமதி கோரி, மத்திய அரசிடம் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.

Advertisement