திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கிறதா? கிரிஷ் சோடங்கர் சொன்ன பதில்

5

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கிறதா என்ற கேள்விக்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அகில இந்திய தலைமை முடிவு செய்யும் என்று பதிலளித்துள்ளார்.

சென்னையில் தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் தமிழகம் மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது;

காங்கிரசில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் புதியதாக மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் செயல்பாடுகள் 6 மாதங்கள் கண்காணிக்கப்படும். சரியாக பணியாற்றவில்லை என்றால் அவர்கள் மாற்றப்படுவார்கள்.

சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. விருப்ப மனு அளித்தவர்களிடம் விரைவில் நேர்காணல் செய்யப்படும். அதன் பின்னர் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள்.

திமுக கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் கருத்துகளை தலைமை கேட்டுள்ளது. அனைவரும் அவரவர் விருப்பங்களை கூறி உள்ளனர். அந்த கருத்துகளின் அடிப்படையில் கட்சி தலைமை முடிவு செய்யும்.

இவ்வாறு கிரிஷ் சோடங்கர் கூறினார்.

Advertisement