'நாங்கள் மட்டுமே வரி விதிப்போம் நீங்கள் பதில் வரி விதிக்கக்கூடாது': அமெரிக்க நிதியமைச்சர்

6

வாஷிங்டன் : கிரீன்லாந்து தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் எந்தவொரு பதிலடியும் கொடுக்க வேண்டாம் என்றும், அது புத்திசாலித்தனமானதல்ல என்றும் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார்.


இது குறித்து பெசன்ட் கூறியுள்ளதாவது: கிரீன்லாந்தை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதித்தால், பதில் நடவடிக்கையாக அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பது குறித்து ஐரோப்பிய யூனியன் ஆலோசித்து வருகிறது.அவ்வாறு பதில் வரி விதித்தால் ஐரோப்பிய பொருட்கள் மீது அமெரிக்கா இன்னும் கடுமையான வரிகளை விதிக்கும்.


அமெரிக்காவிற்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் வர்த்தகப் போரை துவங்குவது மிகவும் விவேகமற்றது; புத்திசாலித்தமானதல்ல. கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது என்பது நில விரிவாக்கம் அல்ல. அது சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும், அமெரிக்காவின் வடக்கு பகுதியை பாதுகாக்கவும் எடுக்கப்படும் ஒரு முக்கிய நடவடிக்கை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement