ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத சீதாஷ்ண நிலை; 16 அடி உயரத்துக்கு பனி கொட்டியதால் மூழ்கிய நகரம்

1

மாஸ்கோ: ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிந்து வருவதால் பல இடங்களில் வீடுகள், வாகனங்கள் புதைந்துள்ளன.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் ரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக பனி கொட்டி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கம்சத்கா தீபகற்பத்தில் மிக மோசமான நிலை ஏற்பட்டிருக்கிறது. பல மாதங்களுக்கு பொழிய வேண்டிய பனி, சில நாட்களிலேயே கொட்டியுள்ளது. இதனால் 16 அடி உயரம் வரை பனி குவிந்துள்ளது.

பெட்ரோபாவ்லோவ்ஸ்க் - காம்ச்சட்ஸ்கி நகரத்தில், பல கட்டடங்கள், கார்கள், தெருக்கள் முழுதும் பனியால் மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் 9வது மாடி வரை பனி குவிந்திருப்பதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காணப்படும் சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. வீட்டின் மேற்கூரையில் இருந்து சரிந்து விழுந்த பனிக்கட்டிகளில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement