மரப்பயிர்களுக்கு நீர்ப்பாசனம் வேண்டாம்!
கடந்த, 26 ஆண்டு களா க, மரப்பயிர் மற்றும் உணவு பயிர் சாகுபடி செய்து வரும், புதுக்கோட்டை மாவட்டம், படுக்கைவிடுதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சத்தியமூர்த்தி : பி.எஸ்சி., பட்டப் படிப்பும், மருந்து கடை நடத்துவதற்கான பட்டயப் படிப்பும் படித்து, தஞ்சாவூரில் இரண்டு மருந்து கடை களை நடத்தி வந்தேன்.
கடந்த 1996ல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
பின், விவசாயத்தில் முழு கவனம் செலுத்துவதற்காக அரசியலில் ஈடுபடுவதை தவிர்த்தேன். கடந்த 2000ம் ஆண்டு முதல், விவசாயத்தில் மட்டும் கவனம் முழுமையாக செலுத்த ஆரம்பித்தேன்.
திருமணமானதும், 5 ஏக்கர் நிலத்தை அப்பா என் பொறுப்பில் ஒப்படைத்தார். நான் என் உழைப்பில், 5 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். இப்போது, 10 ஏக்கர் நிலம் என்னிடம் உள்ளது.
இந்நிலையில், வேலையாட்கள் தட்டுப்பாடு, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளை சமாளிக்க மிகவும் சிரமப்பட்டேன்.
அந்த காலகட்டத்தில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனமான டி.என்.பி.எல்., காகித ஆலை மற்றும் சேஷசாயி காகித ஆலையைச் சேர்ந்த அதிகாரிகள், எங்கள் பகுதி விவசாயிகளை அணுகி, 'காகிதக்கூழ் உற்பத்திக்கு சவுக்கு, தைல மரங்கள் அதிகளவு தேவைப்படுகின்றன. அந்த மரங்களை இங்கு சாகுபடி செய்து கொடுத்தால், நல்ல விலை கொடுத்து கொள்முதல் செய்து கொள்கிறோம்' என கூறினர்.
அதனால், 2005 முதல், 3 ஏக்கரில் சவுக்கும், 2 ஏக்கரில் தைல மரங்களும் சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். நான்கு ஆண்டுகளில் மரங்கள் முதிர்ச்சி அடைந்து அறுவடைக்கு வந்தன.
நல்ல மகசூல் கிடைத்தது; எதிர்பார்த்த விலையும் கிடைத்தது. கணிசமான லாபம் பார்த்ததால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
அதுபோல, கடந்த முறை, 3 ஏக்கர் சவுக்கு சாகுபடியில், அனைத்து செலவு களும் போக 13 லட்சத்து 20,000 ரூபாயும், 2 ஏக்கர் தைல மரம் சாகுபடி வாயிலாக, 3 லட்சத்து 20,000 ரூபாயும் லாபம் கிடைத்தது.
நீர் பாசனமே செய்யாமல், மரம் சாகுபடியில் இந்தளவுக்கு லாபம் கிடைத்தது என்னை பொறுத்தவரை மிகப் பெரிய விஷயம் தான்.
அதுபோல, என்னிடம் மீதமுள்ள 5 ஏக்கரில் நெல், கரும்பு போன்ற உணவு பயிர்களை பயிரிடுகிறேன். இதனால், எங்களுக்கு உணவுக்கும் தட்டுப்பாடு வருவதில்லை ; செல வுக்கும் போதிய பணம் வந்த வண்ணமாக உள்ளது!
தொடர்புக்கு
94421 00052
மேலும்
-
முக்கிய எட்டு துறைகள் டிசம்பரில் 3.70% வளர்ச்சி
-
மாநில வளர்ச்சிக்கு பெருந்தடையாக உள்ளது மத்திய அரசு: தமிழக சட்டசபையில் குற்றச்சாட்டு
-
வாங்குவோர் விற்போர் சந்திப்பால் ரூ.40 கோடி 'ஆர்டர்'
-
எமிரேட்ஸ் என்.பி.டி. வசமாகிறது ஆர்.பி.எல். வங்கி
-
சிறு நிறுவனங்களின் தரச்சான்றிதழ் கட்டண சலுகை நீட்டிக்க பரிசீலனை
-
அதிக பருத்தி கொள்முதல் தட்டுப்பாட்டை தவிர்க்க முடிவு வேகம் காட்டுகிறது இந்திய பருத்தி கழகம்