வாங்குவோர் விற்போர் சந்திப்பால் ரூ.40 கோடி 'ஆர்டர்'

சென்னை தமிழகத்தில் ஜவுளி, உணவு பொருட்கள், தோல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க உதவுவ தற்காக, வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சியை தமிழக அரசின் பேம் டி.என்., நிறுவனம், இம்மாதம், 11, 12ல் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தியது.

இதில், மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ், பிரிட்டன் உள்ளிட்ட, 25 நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. அந்நிறுவனங்கள், தங்களுக்கு தேவைப்படும் பொருட்களின் விபரங்களை, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் தெரிவித்தன.

இதன் வாயிலாக தமிழகத்தை சேர்ந்த, 104 நிறுவனங்களுக்கு, 40 கோடி ரூபாய் மதிப்புக்கு, 'ஆர்டர்'கள் கிடைத்துள்ளன.

Advertisement