மானாமதுரையில் வாழை இலை விலை உயர்வு விளைச்சல் குறைவால் மேலும் அதிகரிக்க வாய்ப்பு

மானாமதுரை : மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாழை இலை தேவை அதிகரித்துள்ள நிலையில் விளைச்சல்குறைவாலும், தொடர் பண்டிகைகளாலும் ஒரு கட்டு வாழை இலை ரூ.3 ஆயிரத்திற்கும் ஒரு இலை ரூ.20க்கும் விற்கப்படுகிறது.



மானாமதுரை வைகை ஆற்றங்கரையை ஒட்டி யுள்ள கால்பிரபு, பீசர் பட்டினம், கள்ளர் வலசை, ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட ஊர்களிலும், இளையான்குடியில் குறிச்சி, கோச்சடை, கீழநெட்டூர், மேலநெட்டூர், பிராமணக்குறிச்சி, தெ. புதுக்கோட்டை, ஆலம்பச்சேரி உள்ளிட்ட ஊர் களிலும் வாழை விவ சாயம் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத காரணத்தினாலும், வாழை விவசாயம் குறைந்தாலும் சில வாரங்களாக தைப்பொங்கல், தை அமாவாசை உள்ளிட்ட பல்வேறு பண்டிகை தொடர்ந்து வந்ததால் மேற்கண்ட ஊர்களில் வாழை இலையின் தேவை பன் மடங்கு அதி கரித்து கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

தற்போது ஒரு கட்டு (40 அடுக்கில் 200 இலை கொண்டவை) ரூ.2500ல் இருந்து ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ஒரு இலையின் விலை ரூ.20 ஆக உள்ளது. இனி வரும் நாட்களிலும் தொடர்ந்து முகூர்த்தம் மற்றும் மகா சிவராத்திரி, கோயில் திரு விழாக்கள் மற்றும் பண்டிகை களாலும் வாழை இலை தேவை அதி கரிக்கும் நிலை உள்ளதால் மேலும் விலை கூடும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வாழை இலை விலை உச்சத்தை தொட்டதை தொடர்ந்து மானாமதுரை, இளையான்குடி பகுதி களிலுள்ள சில ஓட்டல்களில் பிளாஸ்டிக் இலை பயன்பாடு அதிகரித்து உள்ளது.

கள்ளர்வலசை வாழை விவசாயி ராமலிங்கம் கூறியதாவது:

மானாமதுரை வைகை ஆற்றங்கரையை ஒட்டி உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாக உள்ள காரணத்தி னால் கடந்த வருடம் விவசாயிகள் வாழை பயிரிட்ட நிலையில் நல்ல விளைச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து தைப்பொங்கல் சீசன் காலங்களில் வாழை இலை மற்றும் வாழைத்தார் விலை குறைவாக விற்றதை தொடர்ந்து இந்த வருடம் பெரும் பாலான வாழை விவ சாயிகள் வாழை பயிரிடாமல் நெல் பயிரிட்டனர்.

இந்த வருடம் வரத்து குறைவால் தட்டுப்பாடு ஏற்பட்டு வாழை இலை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது கடுமை யான பனி விழுந்து வருவதால் வாழை இலையின் விளைச்சலும் வெகுவாக குறைந்து விடும்.

இனிவரும் நாட் களிலும் திருவிழாக்கள் தொடர்ந்து வருவதால் மேலும் விலை கூட வாய்ப்புள்ளது என்றார்.

Advertisement