டிரைவர்கள் அலைபேசி பயன்பாடு; போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

திருப்புவனம்: தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் டிரைவர்கள் பணியின் போது அலைபேசி பயன் படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்கு வரத்து கழக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அன்றாட வாழ்வில் அலைபேசி பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. பணியின் போது பஸ் டிரைவர்கள் அலைபேசியை பயன் படுத்துவதாக வந்த புகாரையடுத்து தடை விதித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக கமுதி, சாயல்குடி, ராமேஸ்வரம், ஏர்வாடி உள்ளிட்ட நகரங் களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பஸ் டிரைவர்கள் பணியின் போது அலைபேசி பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில் ஹெட் போன், ப்ளூடூத், இயர் பட்ஸ் போன்ற நவீன சாதனங்களை பயன் படுத்தி டிரைவர்கள் அலைபேசி மூலம் பேசுவதாக புகார் எழுந்துள்ளது.

சில நாட்களுக்கு முன் சென்னையில் அலைபேசி யில் பார்த்தபடி அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு பஸ் டிரைவர்கள் ப்ளுடூத், இயர் பட்ஸ் பயன்படுத்தி பஸ்களை இயக்க தடை விதித்ததுடன் இது குறித்த எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் அரசு பஸ்களில் டிரைவர்கள் சீட் அருகே ஒட்டப் பட்டுள்ளது.

மதுரை-ராமேஸ்வரம் வழித்தடத்தில் அனைத்து பஸ்களிலும் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மீறி பஸ் டிரைவர்கள் அலைபேசியை பயன் படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Advertisement