பிரதமர் மோடி 23ம் தேதி தமிழகம் வருகை; இரண்டே முக்கால் மணி நேரம் ஒதுக்கீடு

7

சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வரும், 23ம் தேதி நடக்க உள்ளது.


இதில், பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து, தனி விமானத்தில், பகல் 1:15 மணிக்கு புறப்பட்டு, பகல் 2:15 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வரும் பிரதமர், மாலை 3:00 மணியில் இருந்து, 4:30 மணி வரை, பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின், மாலை 5:05 மணிக்கு, தனி விமானம் வாயிலாக, டில்லி புறப்பட்டு செல்கிறார்.


பிரதமர் மோடியின் பயணத் திட்டம் 2 மணிநேரம் 45 நிமிடங்கள் மட்டுமே என்பதால், கார் பயணத்தை பிரதமர் தவிர்த்துள்ளார்.

Advertisement