நெல் அறுவடை பணி தீவிரம் கதிர் அறுக்கும் இயந்திரம் வருகை

மானாமதுரை: தென் மாவட்டங்களில் நெல் அறுவடை ஆரம்பமானதை தொடர்ந்து வட மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான கதிர் அறுக்கும் இயந்திரங்கள் வரத்துவங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட ஊர்களிலும், தென் மாவட்ட பகுதிகளிலும் சில வாரங்களாக நெல் அறுவடை பணி துவங்கியுள்ளது. இப்பகுதியில் போதிய கதிர் அறுக்கும் இயந்தி ரங்கள் இல்லாத காரணத் தினால் வடமாவட்டங்களில் இருந்து இயந்திரங்கள் சாலை மார்க்கமாக வருகின்றன.

நேற்று மானாமதுரை, பார்த்தி பனுார், கமுதி உள்ளிட்ட ஊர் களுக்கு கள்ளக்குறிச்சியில் இருந்து அறுவடை பணிக்காக இயந்திரங்கள் சென்றன.

டிரைவர் மெய்யப்பன் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களில் நெல் அறுவடை பணி துவங்க இன்னும் 2மாதத்திற்கு மேலாகும் என்பதால் தென் மாவட்டங்களில் அறுவடைப்பணி நடைபெற்று வரும் நிலையில் இங்குள்ள விவசாயிகள் வருடம் தோறும் எங்களை வரவழைத்து அறுவடை பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1600 லிருந்து ரூ.1800 வரை கட்டணம் வாங்கி வருகிறோம்.

இன்னும் ஒரு மாத காலத்திற்கும் மேலாக இப்பகுதியில் தங்கி அறுவடை பணிகளை முடித்த பிறகு எங்களது சொந்த ஊருக்கு செல்வோம் என்றார்.

Advertisement