பாஜ தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நபின்; விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

6

புதுடில்லி: பாஜ தேசிய தலைவர் பதவிக்கு செயல் தலைவர் நிதின் நபின், 46, மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து, போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று அவர் முறைப்படி பொறுப்பேற்றார்.


பாஜ தேசிய தலைவராக, 2020ம் ஆண்டு ஜனவரியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா நியமிக்கப்பட்டார். அக்கட்சியின் விதிகளின் படி, தேசிய தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். 2023ல் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், 2024 லோக்சபா தேர்தலையொட்டி நீட்டிக்கப்பட்டது. தற்போது வரை, பா.ஜ.,வுக்கு புதிய தேசிய தலைவர் நியமிக்கப் படவில்லை.

பா.ஜ., தேசிய தலைவராக இளைஞர் ஒருவரை நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த பீஹார் சாலை கட்டுமானத் துறை அமைச்சர் நிதின் நபின், கடந்த டிச., 14ல் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். பா.ஜ., தேசிய தலைவர் பதவிக்கான தேர்தலில் 37 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்துமே, செயல் தலைவர் நிதின் நபினை தேசிய தலைவராக முன்மொழிந்திருந்தன.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

பதவியேற்பு




வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், பா.ஜ.,வின் தேசிய தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஜனவரி 20) பாஜ தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், அக்கட்சியின் தேசிய தலைவராக நிதின் நபின் முறைப்படி பொறுப்பேற்றார்.


இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா, நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், பாஜ ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்று நிதின் நபினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


பா.ஜ.,வில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுவதால், தேசிய தலைவராக பொறுப்பேற்றதும், பீஹார் அமைச்சர் பதவியை நிதின் நபின் ராஜினாமா செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த நிதின் நபின்?



* ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 1980 மே 23ல் நிதின் நபின் பிறந்தார். இவர் மறைந்த பாஜ தலைவர் நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன் ஆவார்.



* கடந்த 2006ல் பாட்னாவின் பாங்கிபூர் தொகுதியில் வென்று பீஹார் சட்டசபைக்கு முதல்முறையாக தேர்வானார். 4 முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்.


* இவருக்கு பீஹாரின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.


* இவர் ஏற்கனவே பாஜ இளைஞர் அணியின் தேசிய பொதுச்செயலாளர், பீஹார் பாஜ மாநில தலைவர் போன்ற பதவிகளை வகித்து இருக்கிறார். அவர் இன்று தேசிய தலைவர் பதவிக்கு உயர்ந்து இருக்கிறார்.

Advertisement