இப்போது அவர் எனது பாஸ்; நிதின் நபின் பதவியேற்பு விழாவில் மோடி பேச்சு

7

நமது டில்லி நிருபர்



''நான் பாஜ கட்சியின் ஊழியனாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இப்போது பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் எனது பாஸ்'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



டில்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய தலைவர் பதவியேற்பு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் மாபெரும் கட்சியான பாஜவின் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். கட்சியை வலுப்படுத்தப் பங்களித்த பாஜவின் அனைத்து முன்னாள் தலைவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொள்கை மாறாது




நிதின் நபின் இப்போது நமது தலைவர்; அவரது பொறுப்பு பாஜவுடன் மட்டும் நின்றுவிடவில்லை, அது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதும் ஆகும்.


@quote@ நான் பாஜ கட்சியின் ஊழியனாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இப்பொழுது பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் எனது பாஸ். quote


கட்சியின் தலைவர்கள் மாறலாம், ஆனால் கொள்கை மாறாது. தலைமை மாறுகிறது, ஆனால் திசை மாறுவதில்லை. பாஜ ஒரு வித்தியாசமான கட்சியாக உருவெடுத்தது, இப்போது அது ஒரு ஆளும் கட்சியாக தன்னை நிரூபித்துள்ளது.

இளமையும், அனுபவமும்!




நான் ஒரு கட்சித் தொண்டன், கட்சி தொடர்பான விஷயங்களில் நிதின் நபின் தான் முடிவு செய்வார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் முழுப் பொறுப்புடன் வெற்றிகரமாக முடித்து நிதின் நபின் தன்னை நிரூபித்துள்ளார். நிதின் நபினிடம் இளமையும், நீண்ட கால அனுபவமும் உள்ளது.


இது ஒவ்வொரு கட்சித் தொண்டருக்கும் பயனுள்ளதாக இருக்கும். சில நேரங்களில், ஒரு அரசு நீண்ட காலம் ஆட்சியில் நீடிப்பது கடினமாக இருக்கிறது, ஆனால் பாஜ இந்த போக்கை முறியடித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் வெற்றி பெற்று வரும் பாஜ விரைவில் கேரளாவிலும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement