தொழில் துறை வளர்ச்சியில் 'தினமலர்' பங்கு முக்கியமானது

தொழில் துறை சந்திக்கும் பிரச்னைகளை, புகைப்படங்களோடு எளிதாக புரியும் வகையில் செய்திகளாக வடிவமைத்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சொல்லும் 'தினமலர்' நாளிதழின் பணி மகத்தானது

தொழில் சார்ந்த செய்திகளை, 'தொழில்' என்ற தலைப்பில் தனிப்பக்கமாக வெளியிட்டு, அன்றாட சந்தை நிலவரங்கள், ஏற்றுமதி இறக்குமதி குறித்த தகவல்கள் மற்றும் எதிர்கால சந்தை மதிப்பை பற்றி புள்ளி விவரங்களோடு தரும் கலை சிறப்பானது.

சுயதொழில் துவங்குவதற்கு ஆலோசனை, வங்கி கடன் பெறுவதற்கான ஆலோசனைகள், தொழில் முனைவோருக்கு பயனுள்ள திட்டங்கள், மேக் இன் இந்தியா சார்ந்த கருத்துக்கள் மற்றும் தொழில் துறைக்கு அரசுகள் வழங்கக்கூடிய பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய தகவல்கள் வாயிலாக, தொழில் துறை வளர்ச்சியில் தினமலர் நாளிதழ் முக்கிய பங்காற்றுகிறது

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த போது, நாட்டு மாடு இனங்கள் குறித்த அரிய தகவல்களையும், விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் களப்பணி குறித்தும் விவரித்து தினமலர் தந்த தகவல் சிறப்புக்குரியது. நாட்டு மாடு இனங்களை பேணிக் காக்க வேண்டும் என, வாயில்லாத ஜீவன்களின் நலனை பெரிதும் நேசித்தது நம் நாளிதழ்

இன்றும் ஜல்லிக்கட்டு குறித்து செய்திகள் வரும்போது, பிரத்யேக படங்களாக வெளியிட்டு, படிக்கும் நம் மனது ஜல்லிக்கட்டு காளையாக துள்ளித் துள்ளி குதிக்கிறது...

தொடரட்டும் தினமலர் நாளிதழின் சேவை...



-அலங்கை. பொன் குமார்,

இணைச் செயலாளர் - மடீட்சியா, மதுரை மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்

Advertisement