டில்லி இரண்டாவது வெற்றி * மும்பை அணி ஏமாற்றம்
வதோதரா: வதோதராவில் நேற்று நடந்த பெண்கள் பிரிமியர் தொடர் (டபிள்யு.பி.எல்.,), லீக் போட்டியில், 'நடப்பு சாம்பியன்' மும்பை, டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஜெமிமா, 'பீல்டிங்' தேர்வு செய்தார். மும்பை அணிக்காக களமிறங்கிய வைஷ்ணவி, ரஹிலா என இருவரும் முதன் முறையாக டபிள்யு.பி.எல்., தொடரில் அறிமுகம் ஆகினர்.
மும்பை அணிக்கு சஜனா, ஹீலே மாத்யூஸ் ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. சஜனா (9), நந்தனி பந்தில் போல்டானார். ஹீலே 12 ரன் மட்டும் எடுத்த நிலையில், மரிஜான்னே பந்தில் போல்டாகி திரும்பினார். நாட் சிவர் பிரன்ட், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இணைந்து அணியை மீட்க போராடினர்.
3வது விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்த போது, ஹர்மன்பிரீத் கவுர் (41 ரன், 33 பந்து) ஸ்ரீசரனி 'சுழலில்' சிக்கினார். தொடர்ந்து அசத்திய ஸ்ரீசரனி, அடுத்து வந்த நிக்கோலாவையும் (12) திருப்பி அனுப்பினார். மறுபக்கம் நாட் சிவர் அரைசதம் கடந்தார். மும்பை அணி 20 ஓவரில் 154/5 ரன் மட்டும் எடுத்தது. நாட் சிவர் (65), சான்ஸ்கிரிதி (10) அவுட்டாகாமல் இருந்தனர்.
டில்லி அணிக்கு ஷைபாலி (29), லிஜெல்லி (46) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. லாரா 17 ரன் எடுத்தார். ஜெமிமா (51) அரைசதம் விளாச, டில்லி அணி 19 ஓவரில் 155/3 ரன் எடுத்து, 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது. இத்தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இளம் வீராங்கனை
நேற்று டில்லி அணிக்காக அறிமுகம் ஆன ஹரியானாவின் தீயா (16 ஆண்டு, 103 நாள்), டபிள்யு.பி.எல்., தொடரில் களமிறங்கிய இளம் வீராங்கனை ஆனார். இதற்கு முன் மும்பை அணியின் கமலினி (16 ஆண்டு, 213 நாள்) இருந்தார்.
மேலும்
-
திருச்சியில் மார்ச் 8ல் தி.மு.க., மாநில மாநாடு
-
பா.ஜ., நிர்வாகி மீதான வழக்கு ரத்து
-
'அரசு பஸ்சில் இலவசமாக மனைவியோடும் காதலியோடும் ஆண்கள் ஊர் சுற்றலாம்': அ.தி.மு.க., மாஜி புதுவித விளக்கம்
-
பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துள்ள தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு புதிய அறங்காவலர்கள் நியமனம்
-
தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி; ஆட்சியில் கிடையாது
-
கரூர் சம்பவத்தில் பலியானோர் குடும்பத்துக்கு அறிவித்த நிவாரணத்தை வழங்காத பா.ஜ.,