இதுவரை 110 பேர் பலி!
மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர்., பணியால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இதுவரை 110 பேர் பலியாகியுள்ளனர். முதியவர்கள் உட்பட பலர் விசாரணைக்காக, தினமும் 6 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை உள்ளது. ஆவணங்கள் இல்லாத முந்தைய தலைமுறையினரை ஏன் துன்புறுத்த வேண்டும்?
மம்தா பானர்ஜி மே. வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்
பொருளாதார மீள்திறன் அதிகரிப்பு!
குறைந்த கடன் அளவு கொண்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மத்திய அரசின் கடன் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57 சதவீதம்; அனைத்து மாநிலங்களையும் சேர்த்தபின் அதிகபட்சமாக 85 சதவீதமாகும். வெளிநாட்டு கடன் குறைவாக உள்ளதால், நம் பொருளாதாரத்தின் மீள்திறன் அதிகரித்து உள்ளது.
அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அமைச்சர், பா.ஜ.,
ஓட்டுக்காக நாடகம்! ஓட்டுக்களை பெறவே, தான் தேநீர் விற்றதாக பிரதமர் மோடி கூறி வருகிறார். அவர், எப்போதாவது தேநீர் போட்டுள்ளாரா? மக்களுக்கு தேநீர் பரிமாறியிருக்கிறாரா?. இது, எல்லாம் நாடகம். நேரு, கொண்டு வந்த பெரிய திட்டங்களைப் போல் இவர்கள் செய்த ஒரு பணியை சொல்லுங்கள். மல்லிகார்ஜுன கார்கே தேசிய தலைவர், காங்கிரஸ்
மேலும்
-
'ஜி ராம் ஜி' திட்டத்தை விமர்சித்த ராகுலுக்கு பா.ஜ., பதிலடி! ராமர் பெயரை கேட்டாலே அஞ்சுவதாக விமர்சனம்
-
900 இந்தியர்கள் விடுதலை: பட்டியல் தந்தது யு.ஏ.இ.,
-
வரும் 27ல் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரம்
-
போஜ்சாலா சர்ச்சை: வசந்த பஞ்சமி விழா, வெள்ளிக்கிழமை தொழுகை: ஹிந்து - முஸ்லிம் அமைதியாக நடத்த உத்தரவு
-
ஆங்கிலத்தில் 'நபின்': ஹிந்தியில் 'நவின்'
-
15 மாவோயிஸ்ட்கள் ஜார்க்கண்டில் சுட்டு்க்கொலை