ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த விவகாரம்; முதல்முறையாக இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை

8

டாவோஸ்: ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவது குறித்து அமெரிக்காவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.


சுவிட்சர்லாந்தின் டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நிறுத்தம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி கூறியதாவது; அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு நேர்மறையாக இருந்தது. ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. ரஷ்ய அதிபர் புடின் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லாத நிலையில், உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும்.

பிற நாடுகளின் அதிபர்களைப் போல, நானும் எனது நாட்டின் நலனைப் பாதுகாக்க வேண்டும். ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போரில் ரஷ்யா வெற்றி பெறாது. ரஷ்யா போரை நிறுத்துமா என்பது அவர்களின் விருப்பம். ஆனால் உக்ரைன் கண்டிப்பாக போரை நிறுத்தும். ரஷ்யாவைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் குறைந்தது 30 லட்சம் வீரர்களைக் கொண்ட வலுவான ராணுவத்தைக் கொண்டிருக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.


இருநாடுகளுக்கு இடையே போர் துவங்கிய பிறகு, முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Advertisement