இந்திய விண்வெளி திட்டங்கள் உற்சாகம் அளிக்கிறது: சுனிதா வில்லியம்ஸ்
திருவனந்தபுரம்: '' இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் உற்சாகம் அளிக்கிறது,'' என நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள சுனிதா வில்லியம்ஸ், திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் பயணம் அற்புதமாக இருந்தது. இந்தியாவில் இருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. கனவு என்பது ஒருவரின் கற்பனைக்கு ஏற்றவாறு பெரியதாக இருக்கும். குறிப்பாக இன்றைய இந்த சூழலில் விஷயங்கள் மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. மக்கள் புதிய யோசனைகளைக் கொண்டு வந்து அவற்றை நிஜமாக்கி வருகிறார்கள்.
கடந்த காலத்தில் கண்டுபிடிப்புகள் தொழில்நுட்பத்தால் தடைபடக்கூடும் என்ற நிலை இருந்தது. ஆனால், இ்பபோது மக்களிடம் உள்ள கண்டுபிடிப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. கற்பனை மட்டுமே உண்மையான வரம்பு.
இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் உற்சாகம் அளிக்கிறது. எந்தவொரு திட்டமும் நிஜமாகி வருகிறது. சர்வதேச அளவில் மேலும் மேலும் ஈடுபடும் அதே நேரத்திலும் சொந்த திட்டங்களில் தற்சார்புடன் செயல்பட்டு வருகிறது.வெகுவிரைவில் விண்வெளியில் இஸ்ரோ கால் பதிக்கும். இந்திய வீரர் கேப்டன் சுபான்ஷூ சுக்லாவை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி.
பூமியில் மனிதர்களுக்கு இடையே பெரிய மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலை நாமே உருவாக்கிக் கொள்கிறோம். இவை அனைத்துக்கும் தீர்வு காண முடியும். சர்வதேச அளவில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றினால் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
காசா அமைதி வாரியம் சர்வதேச அமைப்பாக மாற்றம்
-
ஸ்டாலின் பணம் கொடுத்ததற்கு நேரடியான ஆதாரங்கள் இருக்கிறதா? தேர்தல் வழக்கில் நீதிபதிகள் கேள்வி
-
திருச்சி மாநாட்டில் தி.மு.க., வேட்பாளர் பட்டியல்?
-
அமைச்சர் துறையில் ஊழல்: வழக்கு தொடர ஈ.டி., முடிவு?
-
ஆப்பரேஷன் சிந்துாரின்போது எதிரிகளை மண்டியிட வைத்தது 'பிரம்மோஸ்': விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தகவல்
-
துாத்துக்குடியில் ரூ.2,292 கோடிக்கு கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அடிக்கல் நாட்டினார் முதல்வர்