உலக விளையாட்டு செய்திகள்
ஜப்பான்-கொரியா 'டிரா'
சபா அல்-சலேம்: குவைத்தில், ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 22வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் ஜப்பான், தென் கொரியா அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் 23-23 என 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
மாலத்தீவு அபாரம்
பாங்காக்: தாய்லாந்தில், தெற்காசிய புட்சல் கால்பந்து சாம்பியன்ஷிப் முதல் சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் நேபாளம், மாலத்தீவு அணிகள் மோதின. மாலத்தீவு அணி 2-1 என்ற கோல் கணக்கில், தொடர்ச்சியாக 4வது வெற்றியை (12 புள்ளி) பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது.
பைனலில் பிரிட்டோரியா
டர்பன்: தென் ஆப்ரிக்காவில், 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் 4வது சீசன் நடக்கிறது. டர்பனில் நடந்த 'தகுதிச் சுற்று-1ல்', பிரைஸ் பார்சன்ஸ் (60), டிவால்டு பிரவிஸ் (75*) கைகொடுக்க பிரிட்டோரியா அணி (172/3, 18.3 ஓவர்) 7 விக்கெட் வித்தியாசத்தில் ஈஸ்டர்ன் கேப் அணியை (170/7, 20 ஓவர்) வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது.
எக்ஸ்டிராஸ்
* புவனேஸ்வரில் நடந்த பார்வையற்றோர் பெண்களுக்கான தேசிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பைனலில் ('டி-20'), ஒடிசா அணி (173/4) 32 ரன் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியை (141/5) வீழ்த்தி கோப்பை வென்றது.
* டில்லியில், தேசிய துப்பாக்கி சுடுதல் தகுதிப்போட்டி நடக்கிறது. பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் திலோத்தமா சென் முதலிடம் பிடித்தார். ஆண்களுக்கான 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவில் விஜய்வீர் சித்து முதலிடத்தை கைப்பற்றினார்.
* அசாமில் நடக்கும் சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 79வது சீசனுக்கான லீக் போட்டியில் கேரளா அணி 3-1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. மேகாலயா அணி 1-0 என, ஒடிசா அணியை வென்றது.
* முன்னாள் இந்திய, ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணியின் தற்காப்பு வீரர் இலியாஸ் பாஷா 61, உடல் நலக்குறைவால் காலமானார்.
* ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடக்கும் டபிள்யு.டி.டி., 'கன்டென்டர்' டேபிள் டென்னிஸ் 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா 2-3 (12-10, 2-11, 5-11, 16-14, 9-11) என, சீனாவின் ஜுன்யாவோ ஷியிடம் போராடி தோல்வியடைந்தார்.
மேலும்
-
சென்னை வந்தார் பிரதமர் மோடி; தேஜ கூட்டணி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார்!
-
இபிஎஸ் தலைமையில் சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம்; சொல்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
-
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு; விமான சேவைகள் பாதிப்பு... தேசிய நெடுஞ்சாலை மூடல்
-
தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
எவ்வளவு கதறினாலும் திமுக மீண்டும் அரியணை ஏறப்போவதில்லை; நயினார் நாகேந்திரன்
-
கூட்டணி குறித்து ஒருவாரத்திற்குள் முடிவு; கிருஷ்ணசாமி அறிவிப்பு