ஆப்பரேஷன் சிந்துாரின்போது எதிரிகளை மண்டியிட வைத்தது 'பிரம்மோஸ்': விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தகவல்

1

சென்னை: ''ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது, பிரம்மோஸ் ஏவுகணை, எதிரிகளை மண்டியிட வைத்தது,'' என, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தெரிவித்தார்.


சென்னை பல்கலையின் 167வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. கவர்னர் ரவி தலைமை வகித்தார். விழாவில், கடந்த 2023 - 24 மற்றும் 2024 - 25ம் ஆண்டு பட்டம் பெற்ற, ஒரு லட்சத்து 93,685 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. அறிவியல் துறையில் பேராசிரியர் எம்.ஜி. ரகுநாதனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.


இலக்கிய பாடத்தில் இருவருக்கு டாக்டர் பட்டம்; 951 பேருக்கு முனைவர் பட்டம் உட்பட 1,323 பேருக்கு, விழா அரங்கில், கவர்னர் ரவி பட்டம் வழங்கி வாழ்த்தினார். விழா வில், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேசியதாவது:


வரும் 2047ல் இந்தியா வளர்ச்சி அடைந்த பாரதமாக மாற, நாம் சேர்ந்து உழைக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. விரைவில், உல கின் 3வது பெரிய பொருளா தார நாடாக உயர்வோம்.


ஏவுகணை தொழில் நுட்பத்தில், இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியான பிரம்மோஸ், ஒரு மிகப்பெரிய திருப்புமுனை. இந்த ஏவுகணை, இந்திய ஆயுதப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை வைத்துள்ள நாடாக, இந்தியா மாறி உள்ளது. ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது, பிரம்மோஸ் ஏவுகணையின் செயல் திறன் நிரூபிக்கப்பட்டது. அந்த தொழில்நுட்பம், எதிரிகளை மண்டியிட வைத்தது. இவ்வாறு அவர் பேசினார்.


பட்டமளிப்பு விழாவில், லயோலா கல்லுாரி ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் திருநங்கை ஜென்சி, முனைவர் பட்டம் பெற்றார்.


இது குறித்து, அவர் கூறுகையில், ''திருநங்கையர் தொடர்பாக, சமூகத்தில் மாற்றங்கள் நிகழ, தமிழக அரசு வேலை வாய்ப்புகளில், திருநங்கையருக்கு இட ஒதுக்கீடு வழங்கி, அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். படிப்பதற்கான ஊக்கத் தொகை, எங்களுக்கு வேண்டாம்; வேலைதான் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

@block_B@

அமைச்சர் புறக்கணிப்பு

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழா, அதன் வளாகத்தில் கவர்னர் ரவி தலைமையில் நேற்று நடந்தது. அதற்கான அழைப்பிதழில், இணை வேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் பெயர் இடம் பெற்றது. ஆனால், நேற்றைய விழாவில், கவர்னரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக அவரது விளக்கம்: தமிழக சட்டசபை மாண்பை கெடுக்கும் வகையிலும், தமிழுக் கும், தமிழ் இனத்துக்கும், தமிழகத்துக்கும் எதிரான செயல்களையே கவர்னர் ரவி தொடர்ந்து செய்து வருகிறார். தமிழக மாணவர்களின் அறிவையும், திறமையையும் கொச்சைப்படுத்தி, பொய்களை பரப்பி வரும் கவர்னருக்கு, பட்டம் வழங்கும் தகுதி இல்லை. எனவே, சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.block_B

Advertisement