காசா அமைதி வாரியம் சர்வதேச அமைப்பாக மாற்றம்

2

டாவோஸ்: காசாவின் புனரமைப்பு பணிக்காக துவங்குவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பால் அறிவிக்கப்பட்ட, காசா அமைதி வாரியம், தற்போது சர்வதேச அமைதி வாரியமாக மாறியுள்ளது.


மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவைக் கட்டுப்பா ட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, இரண்டு ஆண்டுகள் நீடித்த போர், கடந்தாண்டு அக்.,ல் முடிவுக்கு வந்தது. அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், 20 அம்ச காசா அமைதி திட்டத்தை அறிவித்தார்.


இதன் ஒரு பகுதியாக, காசாவில் அமைதியை ஏற்படுத்துவது, புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது போன்றவற்றுக்காக, காசா அமைதி வாரியம் அமைக்கப்படும் என, இந்தாண்டு துவக்கத்தில் அறிவித்தார்.


டிரம்ப் தலைமையிலான இந்த வாரியத்துக்கான உறுப்பினர்களையும் அவர் அறிவித்தார். இதற்கிடையே, இதில் இணையும்படி, இந்தியா உட்பட 60 நாடுகளுக்கு அ வர் அழைப்பு விடுத்தார்.


இந்நிலையில், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மன்ற கூட்டத்துக்கு இடையே, அமைதி வாரியம் தொடர்பான அறிவிப்பை டிரம்ப் நேற்று வெளியிட்டார். அதற்கான இலட்சினை, திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் அவர் அறிவித்தார்.

இதன் முக்கிய அம்சங்கள்:



* காசாவுக்காக துவங்கப்பட்டாலும், உலக அளவிலான மோதல்களுக்கு தீர்வு காண்பதில் இந்த வாரியம் செயல்படும்

* தற்போதைக்கு, 20 நாடுகள் இதில் இணைந்துள்ளன

* நிரந்தர உறுப்பினராக, தலா, 9,000 கோடி ரூபாயை நாடுகள் செலுத்த வேண்டும்

* அர்ஜென்டினா, இந்தோனேஷியா, பராகுவே, உஸ்பெகிஸ்தான், ஆர்மீனியா, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் பங்கேற்றார்

* இந்த வாரியத்தில் இணைய உலக நாடுகள் மற்றும் ஐ.நா., ஆர்வம் காட்டியுள்ளதாக டிரம்ப் கூறினார்

* இது ஐ.நா.,வுக்கு போட்டியாக துவக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்

* பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பு ஆயுதத்தை கைவிட்டு, அமெரிக்காவின் முயற்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று டிரம்ப் கூறி உள்ளார்.

@block_B@

போப்புக்கு அழைப்பு!



அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உருவாக்கியுள்ள, காசாவுக்கான அமைதி வாரியத்தில் சேர, கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான, போப் 14ம் லியோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.block_B

@block_G@

ரஷ்யா நன்கொடை



ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் நேற்று பேசியதாவது: அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள எங்கள் நாட்டின் சொத்துக்களை விடுவித்தால், அதில் இருந்து, 9,000 கோடி ரூபாயை, அமைதி வாரியத்துக்கு நன்கொடையாக வழங்கத் தயாராக உள்ளோம். மீதமுள்ளதை, எங்களுடனான போரில் சேதமடைந்துள்ள உக்ரைன் பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.block_G

Advertisement