போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை முடிவுக்கு கொண்டு வாருங்கள்; ஈரானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

2

டெஹ்ரான்: ஈரானில் போராட்டக்காரர்கள் மீதான அடக்கு முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.


ஈரான் நாட்டில் தற்போது மிகவும் வன்முறை நிறைந்த சூழல் நிலவி வருகிறது.
இது குறித்து, ஐரோப்பிய பார்லிமென்ட் தலைவர் ராபர்ட்டா மெட்சோலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


ஈரான் சுதந்திரமாக இருக்க வேண்டும். ஈரானிய மக்களின் அபிலாஷைகளை ஆதரிப்பதற்காக தீர்க்கமான நடவடிக்கை எடுக்க நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்.


அமைதியான போராட்டக்காரர்கள் மீதான மிருகத்தனமான அடக்குமுறை மற்றும் படுகொலைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். மரண தண்டனைகளை நிறுத்துங்கள். எதிர்ப்பை மவுனமாக்கப் பயன்படுத்தப்படும் அரசு அனுமதித்த கொலைகளை உடனடியாக நிறுத்துங்கள்.


சிறையில் அடைக்கப்பட்ட ஒவ்வொரு ஆர்ப்பாட்டக்காரரையும் அரசியல் கைதியையும் விடுவிக்க வேண்டும். ஈரான் மக்கள் தனியாக இல்லை. ஐரோப்பிய பார்லிமென்ட் உங்களுக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறது. இவ்வாறு ராபர்ட்டா மெட்சோலா கூறியுள்ளார்.

Advertisement