பெண் பயணியிடம் சில்மிஷம்: விமான நிலைய ஊழியர் கைது

3

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், சோதனை என்ற பெயரில், தென் கொரியா பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் கைது செய்யப் பட்டார்.

தென் கொரியாவை சேர்ந்த பெண் பயணி ஒருவர், பணி விஷயமாக, கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு வந்திருந்தார்.

பணி முடிந்து கடந்த 19ம் தேதி தென் கொரியா புறப்பட்டார். பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில், 'செக் இன்' செய்தார்.

அப்போது, அங்கு பணியில் இருந்த விமான நிலைய ஊழியர் ஆபான் அகமது, 25, தென் கொரிய பெண்ணை சோதனை செய்தார்.

அவரது உடைகளில் இருந்து, 'பீப் ஒலி' எழும்புவதாகவும், அவரை தனியே சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறி, ஆண்கள் கழிப்பறைக்கு அழைத்து சென்று, சோதனை என்ற பெயரில், பாலியல் சீண் டலில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்தபோது, தகாத வார்த்தைகளில் திட்டி, வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்தார். பின் எதுவும் நடக்காதது போன்று, அங்கிருந்து சென்று விட்டார்.

இது தொடர்பாக, தென் கொரிய பெண், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.

உடனடியாக, ஆபான் அகமதுவை பிடித்து, விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, ஆபான் அகமதுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement