விசில் சின்னம் இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு: விஜய் மகிழ்ச்சி
சென்னை: ''வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு,'' என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என தேர்தல் கமிஷன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக மக்களின் முதன்மை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் சக்தியாகத் திகழும் தவெகவின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
தேர்தல் ஆணையத்திடம் நம் கட்சிக்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில். தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை மகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்கு கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடு என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.
நமது சின்னம் விசில். நல்லவர்கள் சின்னம் விசில். நாடு காப்பவர்கள் சின்னம் விசில். ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில். ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச் சின்னம் விசில். வருகிற சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (30)
கல்யாணராமன் - Chennai,இந்தியா
22 ஜன,2026 - 22:20 Report Abuse
ஜனத்தையும் மரணத்தையும்தான் இயற்கை கொடுக்கும். 0
0
Reply
Saai Sundharamurthy AVK - ,
22 ஜன,2026 - 21:56 Report Abuse
தேர்தல் ஆணையம்...
சரியான சின்னத்தைத் தான் கொடுத்திருக்கிறது விசிலடித்தான் குஞ்சுகளுக்கு.......!
பிளான் செய்தே கொடுத்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
22 ஜன,2026 - 21:32 Report Abuse
இனி தமிழ் நாட்டில் விசில் குஞ்சுகள்தான் அதிகம் காணப்படும் விசில் ஊதியவுடன் தமிழகத்தில் ஆட்சி மாறும் விஜய் கட்சி கோட்டை ஏறி தமிழகத்தை அரசாளும் எம்.ஜி.ஆர். ஆண்டபின் இப்போதுதான் இந்த விசில் ஞாபகம் வருகிறது விசில் சப்தம் காதுக்கு இனிமையாக விரைவில் கேட்கப்போகிறது 0
0
Reply
Vasan - ,இந்தியா
22 ஜன,2026 - 21:31 Report Abuse
குக்கரும் விசிலும் இணைய வேண்டும்.
குக்கரில் விசில் ஓசை கேட்க வேண்டும். 0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
22 ஜன,2026 - 21:22 Report Abuse
விசில் சத்தம் டெல்லி வரை கேட்கனும் 0
0
vivek - ,
22 ஜன,2026 - 21:43Report Abuse
சிவநாயகம். எங்களுக்கு அந்த விசில் சத்தம் திமுகவிற்கு சங்கு ஊதும் சத்தம் போல கேட்கிறது 0
0
Vasan - ,இந்தியா
22 ஜன,2026 - 22:19Report Abuse
அதற்கு தான் டெல்லிக்கு போய் ஊதுகிறோமே.
ஏற்கனவே 2 முறை போய் வந்தாகி விட்டது. 0
0
T.sthivinayagam - agartala,இந்தியா
22 ஜன,2026 - 22:49Report Abuse
விஜய்யை போல பாஜக தனியே நின்று இருந்தால் அண்ணாமலை சாருக்காவது மதிப்பு இருந்தது இருக்கும் கூட்டணிதலைவர்கள் பின் கதை சரியாக இல்லை என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள். 0
0
Reply
mindum vasantham - madurai,இந்தியா
22 ஜன,2026 - 20:53 Report Abuse
ஒரு பூர்வீக குடியை சேர்ந்தவர் , பூர்வ குடியின் உடல் நிறத்தை கொண்டவர் வருகிறார் 0
0
Reply
எஸ் எஸ் - ,
22 ஜன,2026 - 20:36 Report Abuse
த வெ க களத்தில் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் நடுநிலையாளர்களின் ஆதரவையும் இழந்து விட்டதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறதாம் 0
0
Reply
நெல்லை பாஸ்கர் - ,
22 ஜன,2026 - 20:35 Report Abuse
பெரியார் கொள்கை தலைவராக ஏற்றுக் கொண்ட நீங்கள்....இறைவன் இருக்கிறார் என்று ஒப்புக் கொண்டது நன்று. 0
0
Reply
Yaro Oruvan - Dubai,இந்தியா
22 ஜன,2026 - 20:25 Report Abuse
இயற்கையும் இறைவனும் கொடுத்ததா? அப்பொ தேர்தல் கமிஷன்கிட்ட சின்னம் வாங்கலியா ?? செல்லாதுடா போயி மொதல்ல தேர்தல் கமிஷன்கிட்ட சின்னம் கேளுங்கடா 0
0
Reply
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
22 ஜன,2026 - 20:24 Report Abuse
கரூர் துயர நிகழ்வுக்காக தீபாவளி கொண்டாடவேண்டாம் என்று சொல்லிவிட்டு, பைபிள் படிக்க சொல்லி கிருஸ்துமஸ் கொண்டாடிவிட்டு, பொங்கலை கொண்டாடாமல் பொங்கலுக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்காத ஜோசெப் விஜய்கு ஒரு விசில் போடுங்க. 0
0
Reply
மேலும் 17 கருத்துக்கள்...
மேலும்
-
காசா அமைதி வாரியம் சர்வதேச அமைப்பாக மாற்றம்
-
ஸ்டாலின் பணம் கொடுத்ததற்கு நேரடியான ஆதாரங்கள் இருக்கிறதா? தேர்தல் வழக்கில் நீதிபதிகள் கேள்வி
-
திருச்சி மாநாட்டில் தி.மு.க., வேட்பாளர் பட்டியல்?
-
அமைச்சர் துறையில் ஊழல்: வழக்கு தொடர ஈ.டி., முடிவு?
-
ஆப்பரேஷன் சிந்துாரின்போது எதிரிகளை மண்டியிட வைத்தது 'பிரம்மோஸ்': விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தகவல்
-
துாத்துக்குடியில் ரூ.2,292 கோடிக்கு கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அடிக்கல் நாட்டினார் முதல்வர்
Advertisement
Advertisement