சென்னை வந்தார் பிரதமர் மோடி; தேஜ கூட்டணி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்!

5

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.


தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அதிமுக தலைமையிலான, தேசிய ஜனநயாகக் கூட்டணியில், பாஜ, பாமக, அமமுக, - தமாகா, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. செ ங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் மோடி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து, இன்று பிற்பகல், 2:15 மணிக்கு, சென்னை விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடியை பாஜவினர் வரவேற்றனர். அங்கிருந்து, ஹெலிகாப்டரில் புறப்பட்டு மோடி மதுராந்தகம் சென்றார். அங்கு நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று உரையாற்றினார்.




தினமலர் நேரலை



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரமாண்ட தே.ஜ., கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரையை வீடியோ வாயிலாக காண இங்கே கிளிக் செய்யவும்.

வீடியோவை பார்க்க....

Advertisement