பிரேசில் அதிபர் விரைவில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்: போனில் பேசிய பிறகு பிரதமர் மோடி தகவல்

1


புதுடில்லி: பிரேசில் அதிபர் லுலா விரைவில் இந்தியாவுக்கு வருகை தருகிறார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவுடனான வரி பதட்டங்களுக்கு மத்தியில், பிரதமர் மோடி இன்று பிரேசில் அதிபர் லுலாவுடன் பேசினார். இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

அதிபர் லூலாவுடன் பேசுவதில் மகிழ்ச்சி. இந்தியா-பிரேசில் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உறவின் வலிமை குறித்து நாங்கள் ஆலோசித்தோம்.


இது வரும் ஆண்டில் புதிய உயரங்களை எட்ட உள்ளது. உலகளாவிய தெற்கின் நலன்களை முன்னேற்றுவதற்கு எங்கள் நெருங்கிய ஒத்துழைப்பு மிக முக்கியமானது. விரைவில் அவரை இந்தியாவிற்கு வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement