விஜய்க்கு 'விசில்' சின்னம்: காங்கிரஸ் மகிழ்ச்சி
சென்னை : 'தமிழக சட்டசபை தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டு விட்டது; அனைத்து கட்சிகளும் இப்போது தயாராகி விட்டன' என காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
நடிகர் விஜய் கட்சியான த.வெ.க.,விற்கு பொது சின்னமாக, 'விசில்' ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில், த.வெ.க., முதன்முறையாக போட்டியிட உள்ளது. அக்கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பொது சின்னமாக, 'விசில்' ஒதுக்கப்பட்டுள்ளது. த.வெ.க., தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெறாத கட்சி என்பதால், விசில் சின்னம் இந்த ஒரு தேர்தலுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, த.வெ.க., சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலர் நிர்மல்குமார் கூறுகையில், “தேர்தல் கமிஷனிடம் அளித்த விருப்ப படிவத்தில், முதல் விருப்பமாக விசில் சின்னத்தை குறிப்பிட்டிருந்தோம். அத்துடன் ஆட்டோ, மோதிரம் என 10 சின்னங்களை பரிந்துரைத்திருந்தோம். இதில், விசில் சின்னத்தை விஜய் விரும்பி கேட்டிருந்தார். அவருக்கு பிடித்த விசில் சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது,” என்றார்.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தன் 'எக்ஸ்' பக்கத்தில், 'தமிழக சட்டசபை தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டு விட்டது; அனைத்து கட்சிகளும் இப்போது தயாராகி விட்டன' என பதிவிட்டுள்ளார். இது, காங்கிரஸ் கட்சியில் உள்ள விஜய் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, 'டார்ச் லைட்' சின்னம் மீண்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
டார்ச் டார்ச் என்று கமலை டார்ச்சர் செய்யாதிங்கள் அவர் இப்போது சன்யாசம் பூண்டுள்ளார் அதிகம் பேசமாட்டார் பேசினாலும் அதன்பட செயல்படமாட்டார் அறிவாலயத்திலேயே அவர்க்கு ஒரு ஆசிரமம் இருக்கிறதாம் அங்கேதான் அரசியல் சொற்பொழிவு நடத்துவாராம்
இருண்ட தமிழகத்தில் நாயகன் "டார்ச் லைட்" ஒளி வீச, வறண்ட தமிழன் காதில் ஜன நாயகன் "விசில்" ஒலி கேட்க, பிரமாதமாய் இருக்கும்.மேலும்
-
காசா அமைதி வாரியம் சர்வதேச அமைப்பாக மாற்றம்
-
ஸ்டாலின் பணம் கொடுத்ததற்கு நேரடியான ஆதாரங்கள் இருக்கிறதா? தேர்தல் வழக்கில் நீதிபதிகள் கேள்வி
-
திருச்சி மாநாட்டில் தி.மு.க., வேட்பாளர் பட்டியல்?
-
அமைச்சர் துறையில் ஊழல்: வழக்கு தொடர ஈ.டி., முடிவு?
-
ஆப்பரேஷன் சிந்துாரின்போது எதிரிகளை மண்டியிட வைத்தது 'பிரம்மோஸ்': விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தகவல்
-
துாத்துக்குடியில் ரூ.2,292 கோடிக்கு கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அடிக்கல் நாட்டினார் முதல்வர்