போஜ்சாலா சர்ச்சை: வசந்த பஞ்சமி விழா, வெள்ளிக்கிழமை தொழுகை: ஹிந்து - முஸ்லிம் அமைதியாக நடத்த உத்தரவு
புதுடில்லி: 'மத்திய பிரதேசத்தில் உள்ள சர்ச்சைக்குரிய போஜ்சாலா வளாகத்தில், ஹிந்துக்களின் வசந்த பஞ்சமி விழா மற்றும் முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமை தொழுகையை அமைதியான முறையில் நடத்த, மாநில அரசு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வி கடவுள்
ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள தர் பகுதியில், 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டு, கல்விக் கடவுள் சரஸ்வதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்டடம் உள்ளது.
போஜ ராஜன் கட்டியதாக வரலாற்று சான்றுகள் தெரிவிப்பதால் இந்த கட்டடம் போஜ்சாலா என அழைக்கப்படுகிறது. இதை முஸ்லிம்கள் கமல் மவுலா மசூதியாக கருதி வழிபட்டு வருகின்றனர். இதனால், பல ஆண்டு களாக இந்த கட்டடம் யாருக்கு சொந்தம் என்பதில் சர்ச்சை நீடித்து வருகிறது. தற்போது இப்பகுதி இந்திய தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மத மோதல்களை தடுக்க 2003ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் ஹிந்துக்களும், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்களும் அவரவர் மதப்படி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில், ஹிந்துக்களின் கல்வி கடவுளான சரஸ்வதி தேவிக்கான வசந்த பஞ்சமி இன்று கொண்டாடப் படவுள்ளது. வெள்ளிக்கிழமையான இன்று, முஸ்லிம்களும் தொழுகை நடத்த வருவர் என்பதால், வசந்த பஞ்சமி கொண்டாடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, போஜ்சாலாவில் உள்ள வளாகத்தில் சரஸ்வதி பூஜை நடத்த அனுமதி கோரி, ஹிந்து அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபுல் பன்சோலி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
ஆலோசனை
அப்போது ஹிந்துக்கள் தரப்பில், 'சூரிய உதயத்தில் இருந்து அஸ்தமனம் வரை பூஜைகள் நடத்த வேண்டும்' என, கூறப்பட்டது. அதே போல், வெள்ளிக் கிழமை என்பதால் மதியம் 1:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை தொழுகை நடத்தப்பட வேண்டும் என்றும், அந்த நேரத்தை மாற்றி அமைக்க முடியாது என்றும் முஸ்லி ம் கமிட்டி சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சர்ச்சை ஏற்படாத வகையில், போஜ்சாலா வளாகத்திற்குள் இரு மதத்தினருக்கும் தனித்தனி இடம் ஒதுக்க வேண்டும் என்ற ஆலோசனையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
அதன்படி கட்டடத்திற்குள் நுழையவும், வெளியேறவும் இரு மதத்தினருக்கும் தனித் தனி வழிகள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தொழுகைக்கு எத்தனை பேர் வருவர் என்பதை, மாவட்ட நிர்வாகத்திடம் முஸ்லிம் கமிட்டி முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும், அதற்கேற்றபடி சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில், அவர்களுக்கு பாஸ் வழங்கி கூட்டத்தை ஒழுங்குப் படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதை ஏற்று, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதாக மத்திய, மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளன.
கோவிலில் மசூதி கட்டுவதை விட இந்து மதத்துக்கே மாறி விடலாமே..மேலும்
-
அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது பிடிக்கவில்லையா? பழனிசாமிக்கு முதல்வர் எதிர்ப்பு
-
சபாநாயகர் சொல்ல கூடாது: பழனிசாமி
-
சபாநாயகரை வஞ்ச புகழ்ச்சியால் விமர்சித்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,
-
பழனிசாமிக்கு வாய்ப்பு மறுப்பு; அ.தி.மு.க., வெளிநடப்பு
-
புனிதமான சட்டசபையில் ஸ்டாலின் பொய் சொல்கிறார்
-
தி.மு.க., கூட்டணிக்கு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் ஆதரவு