வரும் 27ல் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரம்
இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், பார்லிமென்டின் இரு சபைகளையும் சுமுகமாக நடத்திச் செல்லவும், எந்தெந்த பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்துவது என்பது குறித்தும், எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்பதற்காக, வரும் 27ம் தேதி, அனைத்துக்கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங் களாக நடக்கவுள்ளது. முதல்கட்ட அமர்வு வரும் 28ல் துவங்கி, பிப்., 13 வரை நடக்கிறது. சிறு இடைவேளைக்கு பின் மார்ச் 9ல் துவங்கி, ஏப்., 2 வரை இரண்டாம் கட்ட அமர்வு நடக்கவுள்ளது. இந்த அட்டவணையின்படி, பட்ஜெட் கூட்டத்தொடரின் அலுவல், மொத்தம் 30 நாட்களுக்கு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஜனாதிபதி திரவுபதி முர்மு முறைப்படி துவக்கி வைத்து, லோக்சபா, ராஜ்யசபா என இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார்.
மத்திய அரசின் 2026 - 27ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்., 1ல் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஜனாதிபதி உரை, அதன் மீதான விவாதம், பட்ஜெட் தாக்கல், பட்ஜெட் விவாதம், பட்ஜெட் நிறைவேற்றம், நிதி மசோதா மற்றும் மானியகோரிக்கை மீதான விவாதம் என அனைத்துமே எந்த சிக்கலும் இன்றி, கனகச்சிதமாக நடத்தி முடிக்க வேண்டுமென்று மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.
ஆனாலும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் மற்றும் அவர்கள் தரும் நெருக்கடிகளை சமாளித்தாக வேண்டும். இதற்காக, கூட்டத்தொடர் துவங்கும்முன், எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்து, அரசு தரப்பு கேட்பது வழக்கம். அதற்கான ஆலோசனைக் கூட்டம், வரும் 27ல் நடக்கவுள்ளது.
பார்லிமென்ட்டில் உள்ள பிரதான கமிட்டி அறையில், இந்த கூட்டம் நடக்க உள்ளது.
இதற்கான முறையான அழைப்பு, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சார்பில், அனைத்துக் கட்சிகளின் சபைத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது
- நமது டில்லி நிருபர் - .
மேலும்
-
அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது பிடிக்கவில்லையா? பழனிசாமிக்கு முதல்வர் எதிர்ப்பு
-
சபாநாயகர் சொல்ல கூடாது: பழனிசாமி
-
சபாநாயகரை வஞ்ச புகழ்ச்சியால் விமர்சித்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,
-
பழனிசாமிக்கு வாய்ப்பு மறுப்பு; அ.தி.மு.க., வெளிநடப்பு
-
புனிதமான சட்டசபையில் ஸ்டாலின் பொய் சொல்கிறார்
-
தி.மு.க., கூட்டணிக்கு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் ஆதரவு