அரசு மரியாதையுடன் அஜித் பவார் உடல் தகனம்; அமித் ஷா உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி
மும்பை: விமான விபத்தில் உயிரிழந்த மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் உடல், அரசியல் தலைவர்கள், தொண்டர்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு தகனம் செய்யப்பட்டது.
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கியது. இதில், விமானத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். மோசமான வானிலையே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஐந்து பேரின் உடல்களும் அஹில்யாபாய் ஹோல்கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, இறுதி சடங்கு செய்வதற்காக அஜித் பவாரின் உடல் மருத்துவமனையில் இருந்து காட்டேவாடியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு மனைவி சுனேத்ரா பவார், மகன்கள் பார்த் மற்றும் ஜெய் ஆகியோர் முன்னிலையில் அஜித் பவாரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், தேசிய கொடி சுற்றப்பட்ட நிலையில், பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்டான் மைதானத்திற்கு அஜித் பவாரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் அமித் ஷா, கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அதேபோல, சித்தப்பாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
அதன்பிறகு, அஜித் பவாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அஜித் பவாரின் மறைவையொட்டி, மஹாராஷ்டிரா அரசு சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கருகி எரிந்துபோன உடலை மீண்டும் ஏன் எரிக்கவேண்டும்?மேலும்
-
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை அதிகரிப்பு: விஜய் குற்றச்சாட்டு
-
தெருநாய் வழக்கில் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு; தீர்ப்பு ஒத்திவைப்பு
-
டிஜிட்டலுக்கு அடிமையாகும் இளம் வயதினர்: மத்திய அரசு கவலை
-
குத்துச்சண்டையில் முதலிடம் பெற்ற மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
-
எரிவாயு தகன மேடையை அகற்ற கோரிய வழக்குகள் தள்ளுபடி
-
முடிவுக்கு வந்தது நீண்ட கால போராட்டம்: புலம் பெயர்ந்த 63 பேருக்கு மறுவாழ்வு திட்டத்திற்கு உ.பி.,அமைச்சரவை ஒப்புதல்