தங்கம் விலை தாறுமாறாக உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து புதிய உச்சம்

7

சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 9,520 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 1,190 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 16,800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.


@1brதங்கம், வெள்ளியில் தான் சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இதனால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 27) ஆபரண தங்கம் கிராம், 14,960 ரூபாய்க்கும், சவரன், 1,19,680 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 387 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்



நேற்று (ஜனவரி 28) காலை, தங்கம் விலை கிராமுக்கு, 370 ரூபாய் உயர்ந்து, 15,330 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,960 ரூபாய் அதிகரித்து, 1,22,640 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிலோவுக்கு, 13,000 ரூபாய் உயர்ந்து, 4 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை மீண்டும் தங்கம் கிராமுக்கு, 280 ரூபாய் அதிகரித்து, 15,610 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,240 ரூபாய் உயர்ந்து, 1,24,880 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றைய நிலவரம்



இந்நிலையில் இன்று (ஜனவரி 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 9,520 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 1,190 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 16,800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 14,720 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில், சவரனுக்கு ஒரே நாளில் 9,520 ரூபாய் அதிகரித்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

வெள்ளி விலையும் உச்சம்




வெள்ளி விலை கிராமிற்கு 25 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 425 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 25 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் வெள்ளி விலை கிலோவுக்கு 38 ஆயிரம் ரூபாய் அதிகரித்து புதிய உச்சம் தொட்டு இருக்கிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்



@block_Y@

விலை உயரும்!

சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ''அமெரிக்கா- ஈரான் இடையே போர் மூண்டால் கணிக்க முடியாத அளவுக்கு தங்கம் விலை உயரும். தங்கம் விலை உயர்ந்தாலும் மக்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். தங்கம் விலை மேலும் அதிகரிக்கும்'' என்றார்.block_Y

Advertisement