ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் சொத்து ரூ.68 லட்சம் கோடி

இந்திய ஆயுள் காப்பீட்டு துறையின் மொத்த சொத்து மதிப்பு, கடந்த ஓராண்டில், 10 சதவீதம் வளர்ச்சி கண்டு, 67.78 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான, ' எல்.ஐ.சி.,' இத்துறையில், 71 பங்குகளை தன்வசம் வைத்து முதலிடத்தில் நீடிக்கிறது.

Latest Tamil News

இத்துறையில், இந்நிறுவனத்தின் சொத்துமதிப்பு 48 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் தனியார் நிறுவனங்கள் பிடித்துள்ளன. சொத்து மதிப்பில் எல்.ஐ.சி., முதலிடத்தில் இருந்தாலும், வேகமான வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள் முந்தியுள்ளன. ஓராண்டில் எல்.ஐ.சி., 8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள் கூட்டாக, 14 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளன.



Advertisement