ஒரு தளம் கொண்ட கட்டடத்திற்கு 'லிப்ட்' அமைக்க 75 ஆண்டு மரம் வெட்டி சாய்ப்பு
தாம்பரம்: தாம்பரத்தில், ஒரு தளம் கொண்ட, பழமையான மாநகராட்சி கட்டடத்திற்கு 'லிப்ட்' வசதி அமைப்பதற்கு, 75 ஆண்டுகள் பழமையான பலா மரத்தை அடியோடு வெட்டி சாய்த்ததற்கு, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி அலுவலகம், தாம்பரம் நகராட்சி அலுவலகம் இருந்த பழமையான கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தின் பின்புறம், 75 ஆண்டுகள் பழமை வாய்ந்த பலா மரம் இருந்தது.
ஒவ்வொரு ஆண்டும், இம்மரத்தில் நுாற்றுக்கணக்கான பலா பழங்கள் காய்த்து தொங்கும். இதை அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பறித்து செல்வர். பழமையான மரம் என்பதால், இதற்கு முன் இருந்த அதிகாரிகள், இம்மரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அகற்றாமல் விட்டு விட்டனர். ஜெனரேட்டர் வைக்கும் போது கூட, இம்மரத்தின் கிளைகளை மட்டுமே வெட்டினர்.
இந்நிலையில், ஒரு தளம் கொண்ட அந்த கட்டடத்திற்கு 'லிப்ட்' வசதி அமைப்பதற்காக, பல அதிகாரிகள் பாதுகாத்து வந்த, 75 ஆண்டுகள் பழமையான பலா மரத்தை அடியோடு வெட்டி சாய்த்து விட்டனர்.
தாம்பரம் மாநகராட்சிக்கு, சானடோரியம் காசநோய் மருத்துவமனை வளாகத்தில், நான்கரை ஏக்கர் நிலத்தில், 43.40 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடம், இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.
இருந்தும், தற்போதுள்ள ஒரு தளம் கொண்ட பழைய கட்டடத்திற்கு, 30 லட்சம் ரூபாய் செலவில், 'லிப்ட்' வசதி எதற்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே நேரத்தில், இதற்காக 75 ஆண்டுகள் பழமையான மரத்தை, அடையாளமே தெரியாத அளவிற்கு அடியோடு வெட்டிய செயலுக்கு, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதேபோல், விரைவில் புதிய அலுவலகம் திறக்கப்பட உள்ள நிலையில், தற்போதுள்ள கட்டடத்தின் மொட்டை மாடியில், 35 லட்சம் ரூபாய் செலவில், செயற்பொறியாளருக்கு அறை கட்டப்பட்டுள்ளதற்கும், மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
@quote@ முதல் தளத்தில் உள்ள கமிஷனரை பார்க்க வரும் முதியோர், மாற்றுத் திறனாளிகள், 'லிப்ட்' வசதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனால் தான் 'லிப்ட்' அமைக்கப்படுகிறது. இதற்காக, பழமையான பலா மரத்தின் கிளைகளை மட்டும் வெட்டுவதாக தான் கூறினார். ஆனால், மரத்தை அடியோடு வெட்டியுள்ளனர். இது தொடர்பாக விசாரிக்கப்படும். - வசந்தகுமாரி, மேயர், தாம்பரம் மாநகராட்சி.quote
இயற்கையை அழிக்கிறான், தெருநாய்கள் மீது வன்மம் கக்குகிறான், நீர்நிலைகிளை மாசுபடுத்துகிறான், போதையின் பின்னால் அலைகிறான். இந்த பேராசை பிடித்த மனித இனத்தால் உலகம் நாசமாகி வருகிறது. அதன் அறிகுறி தான் காலநிலை மாறுபாடு. வருங்கால அனைத்து உயிர்களும் மனித இணையத்தை சேர்த்து பல்வேறு பாதிப்புகள் சந்திக்கும்.
ஆனால் இந்த பேராசை பிடித்த மனித இனம் கவலைபடாது பணமே பிரதானம் என்று பேயாய் அலைகின்றது
வெட்டிய மரத்தை விற்று எவனோ பிழைத்திருப்பான்...
அப்படி பிழைப்பதற்கு சாவலாம்.
75 வருஷ மரத்தை வெட்டி அமைத்த அந்த லிஃப்ட் ஒரு வருஷம் கூட வேல செய்ய போவது இல்லை.. மீண்டும் படி கட்டு தான்.. அந்த மரம் மீண்டும் வருமா.. எவன் கண்ணோ அந்த பலா மரம் ரொம்ப நாள் உறுத்தி இருக்கு. கூறு போட்டு விற்று இருக்கான்.. மீன் விற்ற காசு நாறவா போகுது..
75 வயதான இறந்த மரத்தின் ஆன்மாவிற்கு "ஓம் சாந்தி". வலுவான இதய ஆரோக்கியத்திற்கு படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. படிக்கட்டுகளுக்குப் பதிலாக லிஃப்ட்களைப் பயன்படுத்துபவர்கள் தெரிந்தே தங்கள் இதய ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு முன்கூட்டியே RIP.மேலும்
-
எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும்: தி.மு.க.,வுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
-
நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் 7,500 படுகொலைகள்: அன்புமணி ஆவேசம்
-
தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய முடியாது: சுப்பிரமணியன்
-
அய்யப்பன் கோவில் தங்க கவசத்தை வீட்டில் வைத்து பூஜை செய்த நடிகர்
-
இதே நாளில் அன்று
-
எந்த வகையில் நியாயம்?