பழனிசாமிக்கு வாய்ப்பு மறுப்பு; அ.தி.மு.க., வெளிநடப்பு
சென்னை: சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் பிரச்னைகள் குறித்து பேச வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வலியுறுத்தினார். அவருக்கு வாய்ப்பு வழங்காததால் அ.தி.மு.க.,வினர் கோஷம் எழுப்பினர்.
அப்போது நடந்த விவாதம்:
சபாநாயகர் அப்பாவு: கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எழுப்பும் கேள்விகளுக்கு, அமைச்சர் உரிய பதில் அளித்ததால்தான் நன்றாக இருக்கும். எனவே, பதில் தயார் செய்த பின், இந்த பிரச்னை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
முதல்வர் ஸ்டாலின்: சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து பதில் பெற்று சொல்வதுதான் சரியாக இருக்கும். எனவே, நாளை இந்த பிரச்னை எடுத்துக் கொள்ளப்படும்.
அதன் பின்னும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து கோஷமிட்டபடி நின்றனர்.
அமைச்சர் வேலு: கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேச, ஒரு மணி நேரத்திற்கு முன்னால் கடிதம் கொடுக்கப்படும். அமைச்சர் பதில் தயார் செய்தபின், விவாதத்திற்கு அது எடுத்துக் கொள்ளப்படும்.
ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபால், ஒரு நாளைக்கு முன்னால் கடிதம் கொடுக்க வேண்டும் என மாற்றி விட்டார். கவர்னர் உரை மீது விவாதம் நடக்கும்போது, கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாது என்றும் உத்தரவு போட்டு உள்ளார்.
இப்போது, 'இந்த விவாதத்தை நாளைக்கு எடுத்துக்கொள்ளலாம்; அதற்கு நான் பொறுப்பேற்கிறேன்' என முதல்வர் கூறிய பிறகும் கேட்பது முறையல்ல. துறை சார்ந்த செயலரிடம் குறிப்பு வாங்கி பேசினால்தான் உண்மை தெரியும்.
முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்களுக்கு விதிகள் எல்லாம் தெரிந்தும், நேரத்தையும் காலத்தையும் திட்ட மிட்டு வீணடித்து குழப்பத்தை உருவாக்க நினைக்கின்றனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கடைசி வரை வாய்ப்பு வழங்காததால், பழனிசாமி தலைமையில் அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
மேலும்
-
யுஜிசி விதிகளில் திருத்தம்: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
-
நஷ்டத்தில் இருந்து மீள்வது எப்படி? 'பீச் ரிசார்ட்'டில் அதிகாரிகள் ஆலோசனை
-
எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் தக்க பதிலடி; அதிபர் டிரம்புக்கு ஈரான் பதில்
-
அமெரிக்க மாணவரின் தமிழ் ஆர்வம்: ஆசிரியர்கள் ஆச்சரியம்
-
கவனிப்பாரின்றி அழியும் நிலையில் பழமையான பெகிலி சிவன் கோவில்
-
காளிப்பட்டி கந்தசாமி கோவில் தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்