சபாநாயகரை வஞ்ச புகழ்ச்சியால் விமர்சித்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,

10

சென்னை:

சட்டசபையில் நடந்த விவாதம்:





பா.ஜ., வானதி: கடந்த நான்கரை ஆண்டுகளாக, அமைச்சர்களிடம் இருந்து பதில் தேவைப்படும் போதெல்லாம் அந்த பதிலை சபாநாயகரே கொடுத்திருக்கிறார். இப்போது கவர்னர் உரையையும் அவரே படித்திருக்கிறார்.

இதை பார்க்கும்போது, பாரதியார் சொன்ன, 'யாதுமாகி நின்றாய் காளி' என்பது தான் நினைவுக்கு வருகிறது. கவர்னர் தன் உரையை படிக்காமல் போனதற்கான காரணங்களைக் கூறி உள்ளார்.

அவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்வார் என நம்புகிறோம். தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு மதுவும், போதைப் பொருள்களும் தான் காரணம்.

அமைச்சர் ரகுபதி: தமிழகத்தில் போதைப்பொருள் உற்பத்தி கிடையாது. குஜராத் துறைமுகங்களில் இருந்துதான் அதிகமான போதைப் பொருட்கள் இந்தியாவுக்குள் வருகின்றன. அதை தடுக்க வேண்டி ய கடமையை, மத்திய அரசு செய்யவில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement