கொலம்பியாவில் விமான விபத்து; எம்பி உட்பட 15 பேர் பலியான சோகம்!

1


பகோடா: கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் அந்நாட்டு எம்பி டியோஜெனஸ் குயின்டெரோ உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.


தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் குகுடாவில் இருந்து புறப்பட்ட விமானம் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இந்த விமானம் அரசால் இயக்கப்படும் சதேனா நிறுவனத்திற்கு சொந்தமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் அந்நாட்டு எம்பி டியோஜெனஸ் குயின்டெரோ உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.
புறப்பட்ட 12 நிமிடங்களில் விமானத்தின் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பின்னர் விமானம் தரையிறங்க முயற்சித்த போது விபத்தில் சிக்கி உள்ளது என கொலம்பியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisement