ஐரோப்பிய சந்தையை இந்திய பொருட்களால் ஆக்கிரமியுங்கள்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்
- நமது டில்லி நிருபர் -
''ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம், அங்குள்ள 27 நாடுகளிலும் இந்திய தயாரிப்புகளுக்கான சந்தையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ''இந்த வாய்ப்பை உற்பத்தியாளர்கள் பயன்படுத்தி சர்வதேச தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்து ஐரோப்பிய யூனியன் சந்தையை, நம் தயாரிப்புகளால் ஆக்கிரமிக்க வேண்டும்,'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி உரையுடன் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்றைய அலுவல்கள் துவங்கும் முன், பார்லிமென்ட் வளாகத்தில், நிருபர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
தற்போது தாக்கல் செய்யப்பட இருப்பது, இந்த நுாற்றாண்டின் 2வது காலாண்டின், முதல் மத்திய பட்ஜெட். தொடர்ச்சியாக ஒன்பது முறை, பட்ஜெட் தாக்கல் செய்யும், நாட்டின் முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். பார்லிமென்ட் வரலாற்றில் இது பெருமை மிக்க தருணம்.
தன்னம்பிக்கை பலம் கொண்டதாக இருந்த இந்தியா, தற்போது நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக மாறியிருப்பதோடு, உலக நாடுகளின் ஒருவித ஈர்ப்பு மையமாகவும் ஆகியுள்ளது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில், இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் கையெழுத்திட்டுள்ளன.
ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளிலும், இந்திய தயாரிப்புகளுக்கான சந்தையின் கதவுகள், இதன்மூலம் திறக்கப்பட்டுள்ளன. இதை, இந்திய உற்பத்தியாளர்கள், பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சர்வதேச தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம், ஐரோப்பிய யூனியன் சந்தையை கைப்பற்றி, அதை, இந்தி ய தயாரிப்புகளால் முழுதுமாக ஆக்கிரமிக்க வேண்டும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர், ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்துவதற்கான களம். இரு சபைகளிலும், ஆரோக்கியமான விவாதங்களை நடத்த, எம்.பி.,க்கள் ஒத்துழைக்க வேண்டும். இடையூறுகள் ஏற்படுத்துவதை, எதிர்க்கட்சிகள் விட்டுவிட வேண்டும்.
மாறாக, மக்களின் குரல்களுக்கு மதிப்பு தரும் விதமாக, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில், அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டு, பார்லிமென்ட்டில் எம்.பி.,க்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
@block_B@
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது, வரும் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில், லோக்சபாவில் விவாதம் நடைபெற்று, 4ம் தேதி மாலை, பிரதமர் நரேந்திர மோடியின் பதிலுரையுடன் நிறைவு பெறும். வரும் 1ம் தேதி, காலை 11:00 மணிக்கு தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட் மீதான விவாதம், வரும் 5, 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்த விவாதத்திற்கு என, மொத்தம் 18 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இறுதியாக, 11ம் தேதியன்று, எம்.பி.,க்களின் விவாதத்திற்கு பதிலளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசவுள்ளார்.block_B
@block_Y@
லோக்சபாவில் கேள்வி நேரம் முடிந்து, வழக்கமான அலுவல்கள் துவங்கியதும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் வரும் 1 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல ராஜ்யசபாவும் ஒத்திவைக்கப்பட்டது.block_Y
Soon many brand cars from Europe be flooded in india
அதானிக்கு என்ன லாபம் என்று பிறகு தான் தெரியவரும், முழுமையான தகவல் வந்த பிறகு கருத்து சொல்லலாம். இவர்கள் டிராக் ரெக்கார்ட் அப்படி.
காலமெல்லாம் சொல்வது வேடிக்கை
ஆக்கிரமண்... அவிங்களும் இந்தியாவை ஐரோப்பிய தயாரிப்புகளால் ரொப்புவாங்க.
ஆனா அப்பாவி குடும்பத்திற்கு டாஸ்மாக் மட்டும் போதும்.. ஹி.. ஹி...
தரமான பொருள்களை அனுப்பினால் சீனாவுக்கு மாற்று இந்தியா என்ற நிலை கூட வரலாம்...மேலும்
-
சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு விவகாரம்; நடிகர் ஜெயராமிடம் விசாரணை
-
ஈரானை நோக்கி பயணிக்கும் அதிநவீன போர்க்கப்பல்கள்: டிரம்ப் தகவல்
-
நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.4,800 சரிவு
-
வங்கதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த 99 ஹிந்து குடும்பங்களுக்கு மறுவாழ்வு
-
மகாத்மாவின் சுதேசி கொள்கையே தற்சார்பு இந்தியாவின் அடிப்படை தூண்; பிரதமர் மோடி
-
விலை மதிப்பில்லா அறிவாற்றலை மலிவாக ஏற்றுமதி செய்யும் நிலை; ஸ்ரீதர் வேம்பு வேதனை