சென்னை :புகார்பெட்டி; கல்குவாரி குட்டையில் குப்பைகள் கொட்டி மாசு

குன்றத்துார் அடுத்த சிக்கராயபுரத்தில் 23 கல்குவாரிகள்உள்ளன. இவை ஒவ்வொன்றும் 300 முதல் 400 அடி ஆழம் உடையவை. இந்த 23 கல்குவாரிகளையும் ஒருங்கிணைத்து, நீர்தேக்கமாக மாற்ற, அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிக்கராயபுரம் ஊராட்சி, அதன் அருகில் உள்ள கொல்லச்சேரி ஊராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகள், இந்த குவாரியைச் சுற்றி கொட்டி தீ வைக்கப்படுகிறது. இந்த கழிவுகள் நீரில் கலப்பதால் மாசு ஏற்படுகிறது. குப்பை கொட்டி எரிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.தீபக், குன்றத்துார்.

Advertisement