சென்னை :புகார்பெட்டி;போரூர் சாலையில் குப்பை குவியல்

மதுரவாயலில் இருந்து போரூர் சுங்கச்சாவடியில் செல்லும், அணுகு சாலையோரம் குப்பை கொட்டப்பட்டு உள்ளது. இதன் குவியலில் இருந்து பறக்கும் பிளாஸ்டிக் கவர், வாகனங்களுக்கு இடையே சிக்கி, டயரை சுழல விடாமல் தடுப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன. தவரி, குப்பையை தீயிட்டு எரிப்பதால் புகை எழுந்து, இருசக்கர வாகன ஓட்டிகள், கண் எரிச்சலால் அவதிப்படுகின்றனர்.

நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ள குப்பையால், சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

மா.ரஞ்சித், போரூர்.

Advertisement