இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு; அச்சப்பட வேண்டாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்

3


புதுடில்லி: இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், பயணக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கத் தேவையில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

வவ்வால் மற்றும் பன்றி உள்ளிட்ட விலங்குகளால் பரவும் நிபா வைரஸால், காய்ச்சல், தலைவலி, சுவாசப் பிரச்னைகள் மற்றும் மூளை வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். தற்போது, இந்தியாவில் இருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சீனா உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகள், இந்தியாவில் இருந்து வரும் பயணிகளை கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், பயணக் கட்டுப்பாடுகளோ, வர்த்தகக் கட்டுப்பாடுகளோ ஏதும் விதிக்கத் தேவையில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், நிபா வைரஸ் பாதிப்பு பெரிய அச்சுறுத்தல் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

Advertisement