சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு இதுவே பயங்கர சாட்சி: இபிஎஸ் குற்றச்சாட்டு
சென்னை: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே 70 வயது முதிய விவசாயி தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன், இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது. உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே அவர் சாலையில் ஓடிய காட்சி, இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கர சாட்சி.
தினந்தோறும் “இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?” என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். “இதற்கும் மேலாக சட்டம்-ஒழுங்கு சீர்கெட முடியாது” என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல, தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்.
இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (1)
raja - Cotonou,இந்தியா
30 ஜன,2026 - 16:51 Report Abuse
திருட்டு திராவிட மாடல் விடியாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தமிழர்கள் தயாராகி விட்டார்கள்... 0
0
Reply
மேலும்
-
சபரிமலை பக்தர்களிடம் கட்டணம் : வசூலிக்க கருத்து கேட்கும் ஐகோர்ட்
-
பிப்., 8 ல் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா; பட்டதாரி ஆசிரியர் கழகம் புறக்கணிக்க முடிவு
-
தமிழக போலீசார் என்ன செய்கின்றனர்: மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
-
பிப்.1ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் காசா எல்லை; இஸ்ரேல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவை முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உண்பார்களா? நயினார் கேள்வி
-
வங்கதேச தேர்தலுக்கு முன் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
Advertisement
Advertisement