ஜனாதிபதி உரையில் தொலைநோக்கு சிந்தனை; துணை ஜனாதிபதி சி.பி.ஆர் கருத்து

4

புதுடில்லி: “பார்லிமென்ட் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரை தொலைநோக்கு சிந்தனை கொண்டது,” என, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.



துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: பார்லிமென்ட் இருசபைகளின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரையில், நம் நாட்டின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பயணத்தை தெளிவாக கூறியுள்ளார்.


எதிர்காலத்துக்கான நம்பிக்கையான ஒரு செயல் திட்டத்தையும் கோடிட்டுக் காட்டினார். நாட்டு வளர்ச்சியின் முழுப் பரிமாணத்தையும் அவரது உரை உள்ளடக்கியிருந்தது. இது, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் சென்றடையும். மக்களை மையப்படுத்திய வளர்ச்சியை பிரதிபலித்தது.


வலிமையான, தன்னிறைவு பெற்ற மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ந்த இந்தியாவை உருவாக்க கூட்டு லட்சியத்தையும் வெளிப்படுத்தியது. ஜனாதிபதியின் உரை தொலைநோக்கு சிந்தனை கொண்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


@block_Y@

இலக்கு இல்லை!

ஜனாதிபதி உரை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: வழக்கமான உரையாகவே ஜனாதிபதி உரை இருந்தது. அதில், எந்த உண்மை தகவலும் இல்லை. வளர்ந்த இந்தியா பற்றி உரையில் அதிகம் இருந்தது. ஆனால், அதற்கு தெளிவான இலக்குகளோ , காலக்கெடுவோ இல்லை. புதிய வேலை உறுதி சட்டத்தின் மூலம், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இந்த அரசு பறித்துள்ளது, என்றார்.block_Y

Advertisement