சென்னையில் பீஹார் தம்பதி கொடூர கொலை; 4 நாட்களுக்கு பின் தேடப்பட்ட பெண் உடல் மீட்பு

37


சென்னை: சென்னையில் பீஹாரை சேர்ந்த தம்பதி மற்றும் குழந்தை கொலை வழக்கில், 4 நாட்களாக தேடப்பட்ட பெண்ணின் உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.


சென்னையில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ்குமார், 24, முனிதாகுமாரி, 22, தம்பதி மற்றும் அவர்களது 2 வயது குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கவுரவ்குமார் கண்முன், மனைவியை கொன்றதுடன், இரண்டு வயது பச்சிளம் குழந்தையையும் சுவரில் அடித்து கொலை செய்து, குப்பை தொட்டி மற்றும் கூவத்தில் வீசிய, நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம் அரங்கேறியது. ஐந்து தனிப்படைகள் வைத்து, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து கொலையாளிகளை தேடினர்.

தற்போது 4 நாட்களாக தேடப்பட்ட கவுரவ் குமார் மனைவி முனிதாகுமாரி உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், அடையாறு மற்றும் தரமணி உள்ளிட்ட பகுதியில் பதுங்கியிருந்த, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர், 33, நரேந்திரகுமார், 45, ரவீந்திரநாத் தாகூர், 45, பிஹாஷ், 24, உள்ளிட்ட ஐந்து பேரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement