எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும்: திமுகவுக்கு காங். எம்பி மாணிக்கம் தாக்கூர் பதில்

33


சென்னை: காங்கிரஸை மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ தளபதி விமர்சித்த நிலையில், 'எங்களுக்கும் திருப்பி அடிக்கத் தெரியும்' என்று, எம்.பி., மாணிக்கம் தாக்கூர் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.


மதுரையில் நிருபர்களிடம் மாணிக்கம் தாக்கூர் கூறியதாவது:
மதுரை வடக்கு காங்கிரஸ் தொடர்ந்து பலமாக இருக்கும் தொகுதி. பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும். பார்லிமென்ட் நடப்பதால் என்னால் வரமுடியவில்லை. வரும் 13ம் தேதிக்கு பிறகு அந்த தொகுதியில் பூத் கமிட்டி கூட்டம் போடுவோம். காங்கிரஸ் கட்சியின் பலத்தை காட்டுவோம்.



சும்மா விட்டு விட்டு போய்விடுவோம் என்று நினைக்கிறீர்களா? சும்மா பார்த்துவிட்டு திரும்பி போவதற்கு காங்கிரஸ்காரர்கள் ஒன்னும் வந்தே மாதரம் ஜே என்று மட்டும் சொல்வோம் என்பது மட்டும் கிடையாது. எங்களுக்கும் திருப்பி அடிக்கத்தெரியும். தேர்தல் அறிவிக்கட்டும், கூட்டணி பேசட்டும். தொகுதி பங்கீடு வரட்டும். மதுரை வடக்கு தொகுதியை கட்டாயம் கேட்போம். இவ்வாறு மாணிக்கம் தாக்கூர் கூறினார்.


@block_P@

காத்து இருக்கிறோம்!

கூட்டணி அரசியலின் மாண்பை மிதித்து, பொது மேடையில் காங்கிரஸ் பேரியக்கத்தையும், காங்கிரஸ் பார்லிமென்ட் எம்பிக்களையும் இழிவுபடுத்திப் பேசிய திமுக எம்எல்ஏ கோ.தளபதி மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். இந்த கோரிக்கையை ஏற்க வேண்டும் என காத்து இருப்பதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார். block_P

திமுக எம்எல்ஏ சொன்னது என்ன?




காங்கிரஸ் கட்சிக்கு வார்டில் பூத் கமிட்டி போடக் கூட ஆளில்லை என மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ தளபதி காட்டமாக விமர்சித்து இருந்தார். தற்போது எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும் என மாணிக்கம் தாக்கூர் பதிலடி கொடுத்துள்ளார்.

படியுங்கள்!



திமுக எம்எல்ஏ தளபதி காங்கிரஸை விமர்சித்தது தொடர்பாக தினமலர் இணையத்தில் செய்தி வெளியாகி இருந்தது.

படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement