காங்கிரஸூடன் எந்த மோதல் போக்கும் இல்லை; சொல்கிறார் கனிமொழி

5

நெல்லை: காங்கிரஸ் உடனான கூட்டணியில் எந்த மோதல் போக்கும் இல்லை என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

நெல்லையில் அவர் கூறியதாவது; திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறது. அது யார் என்பதை முதல்வர் தான் முடிவெடுப்பார். தேர்தல் கருத்துக்கணிப்புகள் வராவிட்டாலும், தேர்தல் களம் திமுக கூட்டணிக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. எந்த மோதல் போக்கும் இல்லை. நல்ல சுமூகமான பேச்சுவார்த்தை தான் நடந்தது.

திமுகவின் தேர்தல் அறிக்கையின் மீது மக்கள் நம்பிக்கையோடு வந்து கோரிக்கை மனுக்களை அளிக்கிறார்கள். அவர்களின் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

அடுத்து ஆட்சி அமைக்கப்போவது திமுக தான் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. ஒரு வாக்குறுதியைக் கொடுத்தால், நிறைவேற்றக் கூடிய ஒரே இயக்கம் திமுக தான், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement