டிஜிட்டலுக்கு அடிமையாகும் இளம் வயதினர்: மத்திய அரசு கவலை

4


புதுடில்லி: குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் இடையே டிஜிட்டலுக்கு அடிமையாதல் மற்றும் திரை தொடர்பான மனநல சவால்கள் அதிகரித்து வருகிறது என பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த போக்கு ஆபத்தானது. ஸ்மார்ட் போன்கள், சமூக ஊடகங்கள், கேமிங் மற்றும் ஆன்லைன் தளங்களில் அதிகப்படியான ஈடுபடு ஆகியவை அவர்களின் ஆரோக்கியம், கற்றல் விளைவுகள் மற்றும் நீண்டகால பொருளாதார உற்பத்தித் திறனில் அளவிடக்கூடிய பாதிப்பை ஏற்படுத்த துவங்கி உள்ளது.

டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆன்லைன் செயல்பாடுகளை தொடர்ந்து, அதிகமாக பயன்படுத்துவதால் டிஜிட்டலுக்கு அடிமையாவதுடன் மன உளைச்சல் மற்றும் செயல்பாட்டு குறைபாடு ஏற்படுகிறது.
இத்தகைய நடத்தையானது கவனக்குறைவு, தூக்கமின்மை,பதற்றம் மற்றும் கல்வி அல்லது பணியிடங்களில் செயல்திறன் குறைதல் போன்ற வடிவங்களில் அதிகரித்து வருகிறது.

ஆன்லைன் செலவு, கேமிங் மற்றும் சைபர் மோசடியால் நிதி இழப்பு ஏற்படுவதுடன், வேலைவாய்ப்புக் குறைவு, குறைந்த உற்பத்தி திறன், வாழ்நாள் சேமிப்பு ஆகியைவற்றில் சரிவு ஏற்படுவது என மறைமுக இழப்புகளும் ஏற்படும்.


வலுக்கட்டாயமாக டிஜிட்டலை பயன்படுத்துவதால், மாணவர்கள், இணையவழி துன்புறுத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதுடன், அதனால் பதற்றம், அழுத்தம், நெருக்கடி மற்றும் தூக்க பிரச்னை ஆகயவை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

காப்பருக்கு பற்றாக்குறை



பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சர்வதேச எரிசக்தி மாற்றங்கள் என்பது தொழில்நுட்பத்தால் கட்டுப்படுத்தப்படுவது இல்லை. முக்கிய தனிமங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை வைத்து மாறி வருகிறது.லித்தியம், கோபால்ட், நிக்கல் மற்றும் அரியவகை தாதுக்கள் உள்ளிட்ட தனிமங்கள் ஆகியவை பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்ததுடன், பொருளாதாரத்தை வடிவமைக்க உதவுகிறது. எரிசக்தி பாதுகாப்பு, தொழில்துறை போட்டி மற்றும்புவி அரசியல் அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதனை ஏற்றுமதி செய்யும் நாடுகள் அதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.


இந்தோனேஷியா, காங்கோ மற்றும் சிலி நாடுகளில் உற்பத்தி பற்றாக்குறையால் காப்பர் விலை அதிகரித்து வருகிறது. மின்துறை மற்றும் உலகளவிலான டேட்டா மையங்களுக்கு தேவை காரணமாக, குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு காப்பர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement