குத்துச்சண்டையில் முதலிடம் பெற்ற மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
காஞ்சிபுரம்: பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடந்த குத்துச்சண்டை போட்டியில், முதலிடத்தை பெற்ற மாணவருக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பாராட்டு தெரிவித்தார்.
பள்ளி கல்வித் துறை சார்பில், பாரதியார் பிறந்தநாளை ஒட்டி, தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் குத்துசண்டை போட்டி நடந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவர் கமலேஷ், 14 வயதுக்கான பிரிவில் பங்கேற்றார்.
இப்போட்டியில் 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், இறுதி போட்டிக்கு சென்று முதலிடத்தை பெற்றுள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்த மாணவர் கமலேஷ், பதக்கம் மற்றும் சான்றிதழை, கலெக்டர் கலைச்செல்வியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
மாநில, தேசிய அளவில் ஏற்கனவே இம்மாணவர் பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடந்த போட்டியில் முதலிடத்தை பெற்றிருப்பது குறித்து கலெக்டர் கலைச்செல்வி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும்
-
மதுரை சிறுமியை கடத்தி பலாத்காரம் 'மிஸ்டு கால்' காதலால் விபரீதம்
-
துப்பாக்கியை காட்டி மிரட்டிய அ.தி.மு.க., நிர்வாகிக்கு 'காப்பு'
-
வேன் - லாரி மோதி இருவர் பலி
-
போலி தொழுநோய் சான்றிதழ் வழங்கி ஆசிரியரான 27 பேர் மீது விசாரணை?
-
ரூ.2.99 கோடி கையாடல் 2 அலுவலர்கள் சிக்கினர்
-
குமரியில், 1,000 மெகாவாட் நீரேற்று மின் உற்பத்தி திட்டம்