பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை அதிகரிப்பு: விஜய் குற்றச்சாட்டு
சென்னை: ''தமிழக மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பிழைப்புக்காகத் தமிழகத்தை நம்பி வந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழலைத்தான் இந்தக் கபட நாடகத் திமுக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது,'' என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியும் அவர் மனைவியும் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், நந்தனத்தில் அரசுக் கல்லூரி கேண்டீனில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. இச்சம்பவங்கள், கடும் கண்டனத்திற்கு உரியவை.
தமிழக மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பிழைப்புக்காகத் தமிழகத்தை நம்பி வந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழலைத்தான் இந்தக் கபட நாடகத் திமுக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுப்பதிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் இந்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால்தான் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய அரசு, மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதால், கொடுங்குற்றங்களில் ஈடுபடச் சமூக விரோதக் கும்பல்களுக்குத் துணிச்சல் வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், முதல்வர், கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்றும், எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்றும் வாய்கூசாமல் பொய்யையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.
ஆட்சியின் இறுதிக் கால நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் முதல்வர், இனி இருக்கும் கொஞ்சம் நாட்களிலாவது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களுக்கு எதிரான, மக்களுக்குக் கொஞ்சமும் பாதுகாப்பே இல்லாத, இந்த வெற்று விளம்பர மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுதத் தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்! இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (17)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
29 ஜன,2026 - 20:30 Report Abuse
தமிழகத்தில் திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை அதிகம். மக்கள் எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். அதேபோல அந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு தீனி போடுவது ஒரு சில தமிழ் சினிமா படங்களில் காண்பிக்கப்படும் வன்கொடுமை காட்சிகள். மக்கள் சினிமாவை பார்த்துதான் அழிந்துபோய்க்கொண்டிருக்கின்றனர். 0
0
Reply
Senthoora - Sydney,இந்தியா
29 ஜன,2026 - 20:00 Report Abuse
மனைவி பிள்ளைகளை கைவிட்டவர், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை பற்றி பேசுகிறார். 0
0
vivek - ,
29 ஜன,2026 - 20:26Report Abuse
சிட்னியில் குப்பை கொட்டி பிழைக்கும் உனக்கு தமிழ்நாட்டை பற்றி கவலையோ 0
0
Reply
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
29 ஜன,2026 - 19:40 Report Abuse
கிறிஸ்துவ மிஷினரிகளால் இறக்கிவிடப்பட்ட ஜோசெப் விஜயின் பக்கத்தில் செங்கோட்டையன். என்ன கண்றாவி காம்பினேஷன் இது? சிக்கன் பிரியாணியில் சேமியா பாயாசத்தை ஊற்றி பிசைந்து சாப்பிட்டமாதிரி. 0
0
Reply
SUBBU,MADURAI - ,
29 ஜன,2026 - 18:53 Report Abuse
புஸ்ஸிஆனந்த்: தலைவரே தேர்தல் முடிஞ்சதுக்கு அப்றம் நம்ம ஜனநாயகன் படத்தை ரீலீஸ் செய்வதுதான் நல்லதுன்னு எனக்கு தோணுது! விஜய்: ஏன் அப்படி சொல்றீங்க? புஸ்ஸி: இல்ல இப்பவே படத்தை ரிலீஸ் செஞ்சா டைட்டில் கார்டுல தளபதி விஜய்னு மட்டும் போட வேண்டியதிருக்கும். இதையே தேர்தலுக்கு பின் ரிலீஸ் பண்ணினா மாண்புமிகு தமிழக முதல்வர் உங்கள்
விஜய் அப்டினு டைட்டில் கார்டு போட்டுக்கலாமே அதுக்குதான் சொன்னேன். விஜய்: இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே அப்படியே செஞ்சுருவோம்! 0
0
Reply
SUBBU,MADURAI - ,
29 ஜன,2026 - 18:37 Report Abuse
தலைவரே நீங்க இப்ப திமுகவை போட்டு பொளக்குற மாதிரியே பாஜகவையும் பொளக்குற வேலையை பாருங்க ஜனநாயகன் படம் கெடக்குது அதை அப்றம் பாத்துக்கலாம். அடேய் செத்தநேரம் சும்மா இருங்கடா மொத மாதிரி அவனுகளை நான் பேசுனா இருக்கிற கடுப்புல நம்மள போட்டு பொளந்துருவானுக அதான்டா நான் வாயை மூடிக்கிட்டு இருக்கேன். 0
0
Reply
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
29 ஜன,2026 - 18:25 Report Abuse
சினிமா கடைசி ரீல் காட்சிகளில் ஜீப் எடுத்துட்டு போலீஸ் புடைசூழ வருவார்கள் அத்தொடு படம் சுபம் எனப் போட்டு விடுவார்கள், அதே போல ... திடீல்னு பீகிள் சத்தம். தூங்கி விழித்து தேவையில்லாம ஒரு அரசியல் பார்வை ... பீகிள்.. வேணாமே பிலீஸ்.. 0
0
Reply
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
29 ஜன,2026 - 18:21 Report Abuse
கரூர் துயர சம்பவத்தால் தீபாவளி கொண்டாடவேண்டாம் என்று சொல்லிய ஜோசெப் விஜய் பிறகு பைபிள் படிக்க சொல்லி கேக் சாப்பிட்டு கிருஸ்துமஸ் கொண்டாடிவிட்டு பிறகு வந்த பொங்கலை கொண்டாடாமல் மரியாதைக்கு பொங்கலுக்கு ஒரு வாழ்த்துக்கூட சொல்லாமல் இருந்ததெல்லாம் எதேச்சையாய் நடந்தது என்று நம்பினால்... திருந்துங்க. 0
0
Reply
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
29 ஜன,2026 - 18:20 Report Abuse
கிருஸ்துவ மிஷினரிகளால் இறக்கப்பட்ட ஜோசெப் விஜய் அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் போல உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கன்னு கைகளை காட்டி சொல்லாமல் சொல்லுறார். 0
0
Reply
Viswanathan B N - ,இந்தியா
29 ஜன,2026 - 18:10 Report Abuse
அப்பாடி யாரோ தினசரி செய்திகளை கொண்டு காமிக்கிறாங்க 0
0
Reply
mindum vasantham - madurai,இந்தியா
29 ஜன,2026 - 18:01 Report Abuse
இணைக்கு தேதியில் bulk ஆக இருப்பவன் வைத்தது தான் சட்டம் என்பது போல் இருக்கிறது தமிழகம் , மனிதர்களை மிருகமாக மாற்றியுள்ளது திராவிடம் 0
0
Reply
மேலும் 6 கருத்துக்கள்...
மேலும்
-
மதுரை சிறுமியை கடத்தி பலாத்காரம் 'மிஸ்டு கால்' காதலால் விபரீதம்
-
துப்பாக்கியை காட்டி மிரட்டிய அ.தி.மு.க., நிர்வாகிக்கு 'காப்பு'
-
வேன் - லாரி மோதி இருவர் பலி
-
போலி தொழுநோய் சான்றிதழ் வழங்கி ஆசிரியரான 27 பேர் மீது விசாரணை?
-
ரூ.2.99 கோடி கையாடல் 2 அலுவலர்கள் சிக்கினர்
-
குமரியில், 1,000 மெகாவாட் நீரேற்று மின் உற்பத்தி திட்டம்
Advertisement
Advertisement