நெல்லை தொகுதியையும் என்னையும் பிரிக்க முடியாது: நயினார் நாகேந்திரன்

1

திருநெல்வேலி: நெல்லை தொகுதியையும் என்னையும் எப்போதும் பிரித்து பார்க்க முடியாது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தனது கூட்டத்தை நடத்தி முடிக்கட்டும். அதன் பின்னரே அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக தெரியும். நல்லவர்கள் அனைவரும் எங்கள் பக்கம் வருவார்கள். இதுவரை ஓபிஎஸை சந்தித்து கூட்டணி குறித்து பேசவில்லை. தேவைப்பட்டால் கட்டாயம் பேசுவேன்.



தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.16 லட்சம் கோடி நிதி வழங்கி வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 55 சதவீதம் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தொடர்ந்து பாலியல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக கஞ்சா பழக்கம் உள்ளது. இதில் அதிக அளவில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மின்சார கட்டணத்தை குறைப்பதற்காக பாஜ தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும். பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு, நாங்கள் 5 பைசா கூட செலவிடாமல் மிகப் பெரிய கூட்டத்தை நடத்தி காட்டினோம். நெல்லை தொகுதி மக்கள் என் உடன் பிறந்த சகோதரர்கள். நெல்லை தொகுதியையும் என்னையும் எப்போதும் பிரித்து பார்க்க முடியாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Advertisement